சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

லோகேஷ்-க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்யின் 3 காட்சிகள்.. அல்டிமேட் ஆக மிரட்டிய துப்பாக்கி

Vijay and Lokesh: தற்போதைய இயக்குனர்களில் வாண்டட் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது லோகேஷ் தான். அதற்கு காரணம் அவருடைய அதிரடியான கதையும், பல திருப்பங்களை வைத்து படத்தை சுவாரசியமாகவும் கொண்டு போய் வெற்றியை ருசித்து அதிக லாபத்தை பார்த்து விடுவதால். அந்த வகையில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியடைந்து வருகிறது. இதனாலையே விஜய் இவருடன் இரண்டு படங்களில் நடித்து விட்டார்.

அதில் தற்போது வெளிவர இருக்கும் லியோ படம் 1000கோடி வசூலை அடைவதற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லாததால் லோகேஷ் அவருடைய பங்குக்கு பிரமோஷன் செய்து வருகிறார். அத்துடன் பல பேட்டிகளையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அதில் விஜய்யின் நடிப்பை பற்றி ரொம்பவே தூக்கலாக சொல்லி இருக்கிறார்.

அதாவது லோகேஷ்க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 3 காட்சிகள் இருக்கிறதாம். அதில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தில் ஜீவானந்தம் கேரக்டர் ரொம்பவே எதார்த்தமாக இருந்தது. அதிலும் விவசாயத்தை தயவு செய்து எக்காரணத்தை கொண்டும் விட்டுறாதீங்க என்று சொல்லுற சீனில் அவர் அழுது பார்ப்பவர்களையும் அழ வைத்து தத்ரூபமான நடிப்பை கொடுத்திருப்பார். அந்த காட்சியை நான் ரொம்பவே வியந்து பார்த்தேன் என்று கூறியிருக்கிறார்.

அதே மாதிரி கில்லி படத்தில் சும்மா வெறித்தனமான நடிப்பை கொடுத்து பிரகாஷ்ராஜ் கழுத்தில் கத்தி வைக்கிற சீன் எல்லாம் பார்க்கும்போது என் உடம்பெல்லாம் அப்படி மெய் சிலிர்த்து போய்விட்டது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெறித்தனமான ஆக்ரோஷம் நடிப்பு அவருக்கு தென்பட்டதாம்.

அத்துடன் துப்பாக்கி படத்தில் தப்பு செய்தவரை பொறி வைத்துப் பிடித்து அவருக்கு தண்டனை வழங்கும் ஒரு பொறுப்பான கதாபாத்திரத்தில் நடித்தது ரொம்பவே பிடித்திருந்தது. முக்கியமாக போலீஸ் ஆபிஸரை சூசைட் பண்ண சொல்லி அவருடைய சாவை எப்படி தேர்ந்தெடுக்கனும் என்ற ஆப்ஷனை கொடுத்து மிரட்டும் காட்சிகள் ரொம்பவே அல்டிமேட் ஆக இருந்தது.

இந்த மாதிரி அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் எனக்கு ரொம்பவே வியப்பை கொடுத்து இருக்கிறது. நடிப்பை உள்வாங்கி நடிப்பதில் இவருக்கு இணை இவர் மட்டும்தான் என்று விஜய்யை பற்றி பேசி இருக்கிறார். அதனால்தான் என்னமோ விஜய்யை விடாமல் தொடர்ந்து அவரை வைத்து படங்களை எடுத்து வெற்றி பார்த்து வருகிறார்.

- Advertisement -

Trending News