அஜித் குட் புக்கில் இடம் பெற்ற 3 பேர்.. ஒருவருக்கு மட்டும் அமைந்த கருப்பு பக்கம்

Ajith : அஜித்தின் விடாமுயற்சி படம் பாதியிலேயே தடைபட்ட நிலையில் அடுத்ததாக ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு குட் பேட் அக்லி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் குட் புக்கில் இடம்பெற்ற மூன்று நபர்கள் யார் என்பதை பார்க்கலாம். அதாவது நேர்கொண்ட பார்வை படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக ஆதிக் ரவிச்சந்திரன் பணியாற்றினார்.

அப்போதே அஜித்தை அவர் பெரிதும் கவர்ந்து உள்ளார். அதோடு ஒரு கதையும் சொல்லி அஜித்தை லாக் செய்து வைத்துள்ளார். அதனால்தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிக விரைவில் அஜித்தின் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அடுத்ததாக அஜித்தின் குட் புக்கில் முதலிடத்தில் இருப்பது பிரகாஷ்ராஜ். இவர்கள் இருவருக்கும் ஆசை படத்தில் தொடங்கி ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது.

அதுவும் பிரகாஷ்ராஜ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதரக் கூடியவர். அவரிடமிருந்து சினிமாவில் பல விஷயங்களை கற்றுத் தெரிந்து கொண்டார் அஜித்.

உயிர் நண்பனை இழந்த அஜித்

அடுத்ததாக வெற்றி துரைச்சாமி உடன் நெருக்கமான நட்பு வைத்திருந்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி பைக் டூர் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். பல வருட நண்பனை கடந்த பிப்ரவரி மாதம் அஜித் இழந்துள்ளார்.

இவ்வாறு பிரகாஷ் ராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி துரைசாமி ஆகியோர் அஜித்தின் குட் புக்கில் உள்ள நிலையில் ஒருவர் மட்டும் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார். அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனரையே மாற்றிவிட்டார் அஜித்.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்