அஜித் பேச்சைக் கேட்டு வழிக்கு வந்த 3 பேர்.. இன்னும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் விஷால்

Actor Vishal: நடிகர் விஷாலை பொருத்தவரை இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு தான் ஆசை படுவார். அதாவது நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்கும் பொழுது பதவி கைக்கு வந்ததும் நான் இப்படி பண்ணுவேன் அப்படி பண்ணுவேன் என்று பல வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் முதலில் சொன்னது நடிகர் சங்க கட்டிடத்தை நல்லபடியாக கட்டி முடிப்பேன்.

அதுவும் எந்தவித கடனும் இல்லாமல் சரிவர செய்வேன். அதன்பின் தான் நான் கல்யாணமே பண்ணிக் கொள்வேன் என்று சொன்னார். ஆனால் சொல்லிப் பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை நடிகர் சங்க கட்டிடத்தை கட்டவும் முடியவில்லை. கல்யாணத்தை பண்ணவும் முடியாமல் தவித்து வருகிறார். அதாவது நல்ல பேரை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி வாக்குறுதியை கொடுத்தார்.

ஆனால் உள்ளே வந்ததுக்கு பிறகு தான் இதனுடைய கஷ்ட நஷ்டங்கள் என்னவென்று புரிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் சொன்ன வாக்குறுதியை மீறி கல்யாணத்தையும் பண்ண முடியவில்லை கடன் வாங்கியும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முடியவில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்திற்கு அஜித் சொன்னது என்னவென்றால் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரும் நல்ல சம்பளத்தை வாங்குகிறார்கள்.

Also read: விஜய்யின் அரசியல் விளம்பரத்தை தடுத்த அஜித்.. இயற்கையாகவே இது நடந்து விட்டது..!

அந்த வகையில் அவர்களால் முடிந்தவரை நிதி கொடுத்தால் ஈசியாக சங்கத்தை கட்டி முடித்து விடலாம் என்று சொன்னார். ஆனால் அப்பொழுது இதை யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தற்போது அஜித் சொன்னது சரிதான் என்கிற முடிவுக்கு வந்த பிறகு தானாக வந்து மூன்று பேர் உதவி செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் தற்போது ஒரு கோடி கொடுத்திருக்கிறார். உதயநிதி ஏற்கனவே மூன்று கோடி கொடுத்திருக்கிறார். கமலும் ஒரு கோடி கொடுத்திருக்கிறார். இப்படி தற்போது ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த நிதியை கொடுத்து வருகிறார்கள். இந்த ஒரு விஷயத்தை விஷால் அப்பொழுதே முயற்சி எடுத்துப் பார்த்து இருந்தால் இன்றைக்கு எல்லாமே நல்லபடியாக முடிந்திருக்கும்.

விஷாலை பொருத்தவரை குண்டு சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டணும். அவரும் வாழாமல் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் இருப்பது தான் இவருடைய செயலாக இருக்கிறது. இன்னமும் இந்த விஷயத்தில் பெருசாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இப்படியே போனால் நடிகர் சங்கத்தை எப்பொழுதுதான் கட்டி முடிப்பார். எப்பொழுது தான் இவருக்கு கல்யாணம் ஆகப்போகுது.

Also read: 2 நண்பர்கள் மரணத்தால் நடுநடுங்கி நிற்கும் அஜித்.. வட்டத்தை விட்டு வெளிவர பயப்படும் AK

Sharing Is Caring:

அதிகம் படித்தவை