சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உணவே விஷம், சாப்பிட்றதுக்கு முன்னாடி நோட் பண்ண வேண்டிய 3 விஷயம்.. படிச்சு தெரிஞ்சுக்கோங்க

Food Awarness: உணவே மருந்து என்பது மாறி, இப்போதெல்லாம் உணவே விஷம் என்று ஆகிவிட்டது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களால் மரணம் ஏற்படும் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே குலை நடுங்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.

மளிகை கடைகளில் வாங்கும் பொருட்களில் எல்லாம் ரசாயனம் கலந்திருக்கிறது, நாங்கள் ஆர்கானிக் பொருட்களை கொடுக்கிறோம் என ஒரு கூட்டம் கிளம்பியது. அதிக விலை, பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்னும் அளவுக்கு இந்த ஆர்கானிக் பொருட்கள் மாறியது.

இப்போது ஆர்கானிக் என்று அட்டவணை போட்டு வரும் பொருளிலும் கலப்படம் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகி வருகிறது. உணவு மீதான ஆசை, அந்த உணவுக்காக கொடுக்கப்படும் விளம்பரம் என இதை சுற்றி மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.

பாலில், ஹார்லிக்ஸ் போட்டு குடித்தால் ஏ டி எச் சக்தி கிடைக்கும், இந்த சப்பாத்தி மாவில் சப்பாத்தி பூரி சாப்பிட்டால் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் என எவ்வளவு விளம்பரங்கள் அடுக்கிக் கொண்டு வருகிறார்கள்.

குழந்தைகளுக்கு எது சத்து, எது விளம்பரத்திற்காக சொல்லப்படுகிறது என்ற வித்தியாசம் கூட தெரியாமல் மக்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக குழந்தையின் பிரதான உணவாக இருந்த செர்லாக்கை சில நாடுகளில் தடை செய்கிறார்கள்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் குழம்பு மிளகாய்த்தூளை சில நாடுகளில் தடை செய்கிறார்கள். இப்படி அன்றாட வாழ்வியலில் அத்தனையுமே ஆபத்தாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் பொருட்களில் இந்த மூன்று விஷயத்தை பார்த்து தெரிந்து கொண்டாலே, பாதி ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அது என்ன என்று பார்க்கலாம்.

நோட் பண்ண வேண்டிய 3 விஷயம்

கெட்டு போகும் உணவு பொருட்கள்: கெட்டு போகாத உணவு பொருட்கள், பூச்சி இல்லாத காய்கறிகள் என நவநாகரிக உணவுப் பொருட்களை நாம் நாடுகிறோம். உண்மையில் நாம் சாப்பிடும் பொருட்களை வாங்கி வைக்கும் போது அது ஒரு சில நாட்களில் கெட்டு போனால் தான் அது இயற்கையான உணவு என்று அர்த்தம். பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இயற்கையான உணவை நாடித்தான் வரும். பூச்சிக்கொல்லி பயன்படுத்தாத தாவரங்கள் கொடுக்கும் காய்கறிகளில் தான் பூச்சி இருக்கும். இதனால் ஒரு உணவு கெட்டுப் போனால் தான் அதை இயற்கையான உணவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்ணையில் விளையும் பொருட்கள்: பசும்பால் இப்போ நேரடியாக கறக்கப்பட்ட அப்படியே பாக்கெட் செய்து விற்கப்படுகிறது என்ற விளம்பரத்தை கேட்டிருப்போம். ஒரு பொருள் எப்போது தொழிற்சாலைக்கு சென்று அங்கு பாக்கெட் செய்யப்படுகிறது அப்போதே அது கெட்டுப் போகாமல் இருக்க வேதியல் பொருட்களை சேர்த்து விடுவார்கள். ஒரு தோட்டத்திற்கு சென்று செடியில் பறிக்கும் காய், பால் கரப்பவர்களிடம் நேரடியாக சென்று வாங்கப்படும் பால் இதுதான் இயற்கையான உணவு. தொழிற்சாலையிலிருந்து நேரடி இயற்கையான உணவுப் பொருட்களை தருகிறோம் என்று சொன்னால் தயவு செய்து நம்பி விடாதீர்கள்.

விளம்பரங்கள்: எப்போதாவது பப்பாளி பழத்திற்கும், பச்சை மிளகாய் விளம்பரம் வந்து பார்த்து இருக்கிறீர்களா. இயற்கையான உணவுகளுக்கு யாரும் விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். அதில் செயற்கை செறிவூட்டி தன்னுடைய லாபத்திற்காக சிலர் விற்கிறார்கள். இதை இயற்கையான உணவுப் பொருள் என்று நம்பி ஏமாறுவது நம்முடைய முட்டாள்தனம் தான். எப்போது ஒரு உணவு பொருள் ஒருவரின் உடமையாகி அதற்காக அவர் அதிக விளம்பரம் கொடுத்து விற்கிறாரோ அப்போதே அது இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.

- Advertisement -

Trending News