Entertainment | பொழுதுபோக்கு
பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி
விஜய் பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி, மண்ணைக் கவ்விய 3 படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

தற்போது கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல சருக்கல்களை சந்தித்தார். ஏறத்தாழ 10 படங்களுக்கு பிறகு தான் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதிலும் 90களில் பிரசாந்த்துடன் விஜய் நேருக்கு நேர் மோதிய 3 படங்களில் படுதோல்வியை சந்தித்தார்.
நினைத்தேன் வந்தாய்: விஜய் இரண்டு கதாநாயகிகளான ரம்பா மற்றும் தேவயானி உடன் இணைந்து நடித்த படம் தான் நினைத்தேன் வந்தாய். இந்தப் படத்தில் விஜய் மற்றும் ரம்பா இருவரும் காதலர்கள். ஆனால் பெற்றோர் விஜய் மற்றும் தேவயானி இருவருக்கும் நிச்சயம் செய்கின்றனர். கடைசியில் தேவயானி மற்றும் ரம்பா இருவரும் சகோதரிகள் என்பதால் அக்காவின் வாழ்க்கைக்காக காதலை தியாகம் செய்ய துணிவார். கடைசியில் தேவயானிக்கு உண்மை தெரிந்து காதலர்களை சேர்த்து வைப்பார். இதுதான் படத்தின் கதை.
இந்த படம் ரிலீஸ் ஆன போது தான் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த ஜீன்ஸ் படமும் ரிலீஸ் ஆனது. ஜீன்ஸ் படத்திற்கு முன் விஜய்யின் நினைப்பில் வந்தாய் படம் தாக்குப் பிடிக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அல்டிமேட் ஆக இருக்கும். அதிலும் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை தாறுமாறாக குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: 90ஸ் கனவு கன்னி சிம்ரனுடன் இணைந்து பிரசாந்த் நடித்த 5 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அந்தகன்
நிலவே வா:1998 ஆம் ஆண்டு ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான நிலவே வா திரைப்படத்தில் விஜய், சுவலட்சுமி, சங்கவி இணைந்து நடித்திருப்பார்கள். இதில் விஜய் சிலுவையாகவும், சுவலட்சுமி சங்கீதா கேரக்டரில் நடித்திருப்பார்கள். வெவ்வேறு மதத்தை சேர்ந்த சிலுவை மற்றும் சங்கீதா இருவரும் எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
நிலாவே வா திரைப்படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் பிரசாந்த், சிம்ரன் இணைந்து நடித்த கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படமும் வெளியானது. நிலவே வா படம் போலவே காதல் கதைக்களத்தை கொண்ட படமாகவே இருந்தாலும், இந்த படத்தில் ரசிகர்கள் விரும்பும் சுவாரஸ்யம் இருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆனது.
Also Read: யாருகிட்ட விளையாடுற, தொலைச்சிடுவேன்.. அஜித்துக்காக தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய மம்பட்டியான்
மின்சார கண்ணா: 1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், குஷ்பூ, ரம்பா, மோனிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் மின்சார கண்ணா. இந்தப் படத்தில் ஆண்களை வெறுக்கும் குஷ்புவின் மனதை மாற்றி, அவருடைய தங்கை காதல் மோனிகாவை காதல் திருமணம் செய்து கொள்ள, பணக்காரரான விஜய் தன்னுடைய குடும்பத்துடன் படும் கஷ்டம் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
மின்சார கனவு திரைப்படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தான் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இதில் பெற்றோரின் சம்பந்தத்திற்காக பிரசாந்த் உடைய வீட்டுக்கும் சிம்ரனும், சிம்ரன் உடைய வீட்டிற்கும் பிரசாந்த்தும் செல்கின்றனர். கடைசியில் சிம்ரனின் தந்தைக்காக பிரசாந்த் தன்னுடைய காதலை தியாகம் செய்யத் துணிகிறார். கடைசியில் சிம்ரன் மற்றும் பிரசாந்த் இருவரும் சேர்வதை பரபரப்புடன் காட்டி ரசிகர்களைக் கவர்ந்து, வசூலை அள்ளியது.
Also Read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்
இவ்வாறு 90-களில் வெற்றி பெறுவதற்காக விஜய் திணறும் சமயத்தில், பிரசாந்த் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதிலும் விஜய் டாப் நடிகர்களான ரஜினி, அஜித் படங்களிடம் மண்ணைக் கவ்வியது மட்டுமல்லாமல் பிரசாந்த்திடமும் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்தார். ஆனால் ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு உண்மையாக விஜய் தற்போது கோலிவுட்டில் அசைக்க முடியாத கதாநாயகனாக மாறி இருப்பது, அவரின் உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.
