ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மக்களை சந்திக்காமலே ஆட்சியைப் பிடித்த 3 மாபெரும் தலைவர்கள்.. இப்பவும் செல்வாக்கு குறையாத எம்.ஜி.ஆர்

 Political Leaders: தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு மிகவும் அவசியம். அதிலும் அரசியல்வாதிகள் அந்த தேர்தலின் போது தான் காசை தண்ணியாக இறைத்து ஓட்டுக்களை சம்பாதிப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் மாறாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய மூன்று தலைவர்களும் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் படுத்துக்கொண்டே மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்: குறிப்பிட்ட சமூகத்தினரால் தெய்வமாக பார்க்கப்படும் இவர், எந்த வித பாகுபாடும் இல்லாமல் ஆன்மீகவாதியாக விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்த தியாகி. இவர் 1962 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் மக்களை சந்திக்காமலே வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.

Also Read: விஜய்யின் பேச்சை மீறி நடக்கும் அநியாயம்.. அடுத்த முதல்வர் தளபதியா, உதயநிதியா.? குளிர் காயும் ப்ளூ சட்டை

மூக்கையாத் தேவர்: நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த இவர், மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு உடைவராக இருந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1957, 1962, 1967, 1971 போன்ற ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குறிப்பாக 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் வயது முதிர்ச்சியின் காரணமாக எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் வீட்டில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் மக்கள் அவருக்கு கொடுத்த ஆதரவு தான்.

Also Read: வாய தொறந்தா பாலாபிஷேகம், தோரணம் கட்ட ஆள் இருக்காது.. கமல், எம்ஜிஆர் வளர்த்ததை சீரழிக்கும் விஜய்

எம்.ஜி.ஆர்: இப்போது இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை எம்.ஜி.ஆரை பார்த்து தான் வருகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்தினார். இவர் மீது மக்கள் வெறித்தனமாக பாசம் வைத்திருந்தனர். இவருடைய படம் ரிலீஸ் ஆனால் திரையரங்குகளில் திருவிழா போல் குவிவார்கள்.

அதே போல் அவர் அரசியலுக்கு நுழைந்த போது மக்களுக்கு நல்லது செய்வார் என உறுதியாக நம்பினார்கள். அவரும் அவர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றினார். இதனாலே எம்ஜிஆர் 1967, 1980 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் படுத்துக்கொண்டே ஆட்சியைப் பிடித்தார். இதற்காக அவர் மக்களை சந்தித்து பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

Also Read: 60 வருடத்திற்கு முன்பே எம்ஜிஆர் நடித்த ஏலியன் படம்.. சங்கர் கூட கை வைக்க பயப்பட்ட அயலான் பட கதை, பட்ஜெட்

- Advertisement -

Trending News