சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எவ்வளவு முட்டி மோதியும் ஜெயிக்க முடியாத விஜய் ஆண்டனி.. அடுத்தடுத்து தூக்கி விட காத்திருக்கும் 3 படங்கள்

Vijay Antony: ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் தொடர்ந்து அவர்கள் தோல்வியை மட்டும் சந்திக்கக்கூடிய பரிதாபத்திற்கு ஆளாகி விடுவார்கள். அப்படித்தான் தற்போது விஜய் ஆண்டனியின் நிலைமை இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் இசையமைப்பாளராக மட்டுமே வலம் வந்தவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இவரை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அதனாலயே அவருக்கு நடிப்பு மீதுஅதிக ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து படங்களை கொடுத்து வந்தார். ஆனால் போகப் போக அவருடைய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

இருந்தாலும் முழு மனதுடன் நடிப்பில் கவனம் செலுத்தி ரிஸ்க்கான பல வேலைகளை பார்த்தார். அப்படி ஒரு படத்தில் இவர் எடுத்த ரிஸ்க் தான் இவர் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் பெரிய விபத்துக்குள்ளானார். அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக வந்த இவர் மறுபடியும் மக்களிடம் தோற்றுப் போய் நின்றார்.

இதனால் விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவருக்கு யாரும் எதிர்பார்க்காத திடீர் இழப்பு இவருடைய மகள் இறந்தது தான். இந்த ஒரு விஷயம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் இதை மறக்கடிக்கும் விதமாக இவருடைய ரத்தம் படத்தின் பிரமோஷனுக்கு அவருடைய இளைய மகளை கூட்டிட்டு வந்தார்.

அப்பொழுது கூட இவருடைய முகத்தில் நிறைய சோகங்களை வைத்துக்கொண்டு இதை கடந்து போக வேண்டும் என்பதை முன்வைத்து பல விஷயங்களை பேசினார். அப்படிப்பட்ட இவர் எப்படியாவது முட்டி மோதி ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

அந்த வகையில் கிறிஸ்மஸ் தினத்தன்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தை ரிலீஸ் செய்ய போகிறார். இப்படத்திலயாவது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மறுபடியும் போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து அக்னி சிறகுகள் மற்றும் வள்ளிமயில் படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களிலும் இவருக்கு வெற்றி கிடைத்தால் ஹீரோவாக பயணிக்கலாம் இல்லையென்றால் மறுபடியும் இசையில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்ற முடிவில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News