ஒரு முறை கூட நோ-பால் வீசாத 3 கிரிக்கெட் வீரர்கள்.. இந்திய அணிக்கு உலக அளவில் பெருமை சேர்த்த ஜாம்பவான்

கிரிக்கெட்டின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போட்டியின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் 60 ஓவர்கள் விளையாடக்கூடிய போட்டிகள் சுவாரசியத்தை அதிகமாக்க 50 ஓவர்களாய் குறைக்கப்பட்டது . இப்பொழுது 20 ஓவர் போட்டிகள் என்ற குறுகிய அளவில் நடத்தப்படும் போட்டிகள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளரின் கடமை பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு வீரர் நன்றாக பந்து வீசுவதையும் தாண்டி வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது ரொம்பவே கடினம். அப்படி நோ-பால் எனப்படும் பந்து இதுவரை தன் வாழ்நாள் கிரிக்கெட்டில் விசாதவர்கள் மூன்று பேர் தான்.

நோ- பால் எனப்படுவது மிகவும் ஆபாயகரமான பந்தானது வரையறுக்கப்பட்ட கோட்டுக்கு வெளியில் நின்று வீசுவது,.மட்டையாளரை பதம் பார்க்கும் அளவில் வீசுவது. ஏனோதானோ என்று வீசக்கூடிய பந்தாகும். அதற்கு ஒரு ரன் பெனால்ட்டியாக கொடுக்கப்படும். இப்பொழுது அதற்கு ஃப்ரீ ஹிட் கொடுக்கப்படுகிறது . அந்த பந்தில் ரன் மட்டும் கணக்கிடப்படும், அவுட் கணக்கிடப்படாது அப்படி அபாயகரமான பந்தை வாழ்நாளில் வீசாத மூன்று பௌலர்களை இதில் பார்ப்போம்,

Also Read: கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்

கபில்தேவ்: 1983 ஆம் ஆண்டு இந்திய அணி இவர் தலைமையின் கீழ் தான் உலக கோப்பையை வென்றது. மொத்தம் 136 டெஸ்ட் போட்டி, 255 ஒரு நாள் போட்டிகள் விளையாடிய கபில்தேவ் ஒரு முறை கூட நோபல் வீசியது கிடையாது. அந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்கும் இவரது பந்துவீச்சு.

டென்னிஸ் லில்லி: ஆஸ்திரேலியாவின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் லில்லி. எப்பொழுதுமே பெரிய மீசையுடன் காணப்படுவார்.1980 காலகட்டங்களில் தலைசிறந்த பவுலராக திகழ்ந்தார். 70 டெஸ்ட் மற்றும் 63 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒரு முறை கூட நோ பால் விசாத ஒரு திறமையான பவுலர்.

இம்ரான் கான்: 1992 பாகிஸ்தானின் உலக கோப்பை வாங்கியது இவர் தலைமையில் தான். ரிவர்ஸ் ஸ்விங்கில் மிகவும் ஆ சாத்திய திறமை கொண்ட இவர் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். 88 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு முறை கூட நோ பால் வீசியது கிடையாது.

Also Read: உலகக் கோப்பை இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்.. இளம் வீரர்களை ஒதுக்கிய அஜித் அகார்கர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்