திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் செய்த மோசமான ரெக்கார்டுகள்.. எள்ளளவும் நம்பவே முடியாத 2ஐ செய்த ட்ராவிட்

அட இவரா இப்படி என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு நம்பவே முடியாது சில ரெக்கார்டுகளை படைத்துள்ளனர் 3 கிரிக்கெட் ஜாம்பவான்கள். அந்த மூன்று வீரர்கள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் விசித்திரமான விதத்தில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதிலும் டிராவிட் என்ன ரெக்கார்டு வைத்துள்ளார் என்பதை இதில் பார்க்கலாம்.

சனத் ஜெய சூர்யா: மார்டன் உலக கிரிக்கெட்டுக்கு அதிரடி ஆட்டம் எப்படி ஆட வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் ஜெயசூர்யா. இலங்கையைச் சேர்ந்த இவர் இப்பொழுது அந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஓப்பனிங் இறங்கும் இவர் இதுவரை 34 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அதில் பத்து முறை முதல் பந்தில் கோல்டன் டக் மூலம் வெளியேறியுள்ளார்.

இன்சமாம் உல் ஹக்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரன்கள் எடுக்க ஓடுவதில் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறார், இவரின் அதிக எடையினால் ஓடுவதற்கு சிரமப்படுகிறார் என ஆரம்பத்தில் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது .இவர் ரன் அவுட் மூலம் 38 முறை தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

ராகுல் டிராவிட்: டெஸ்ட் கிரிக்கெட் என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது ராகுல் டிராவிட் தான். எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே மிகவும் மோசமான சாதனை ஒன்றை வைத்து இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் மொத்தம் 55 முறை தனது விக்கெட்டை பவுல்ட் எனப்படும் ஸ்டம்ப்புகள் மூலம் பறிகொடுத்திருக்கிறார். இந்தியாவிற்காக 164 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 52.31 சராசரியை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் 22 பந்துகளுக்கு 50 ரன்கள் என அதிவேக அரை சதமும் அடித்திருக்கிறார்.

- Advertisement -

Trending News