வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக் பாஸில் அதிக ஓட்டிங்கில் காப்பாற்றப்படும் 3 போட்டியாளர்கள்.. கவின் பாதையில் பயணிக்கும் பிரதீப்

Bigg Boss 7 Pradeep: இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூன்றாவது வார நாமினேஷன் நேற்று முடிவடைந்து இருக்கிறது. நிக்சன், மணி, அக்ஷயா, விசித்ரா, ஐசு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகிய 11 பேர். டாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று ஓட்டிங் ஆரம்பித்த உடனேயே பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போட ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த இரண்டு வாரத்தில் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது, போன வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் ஒரு சிலரின் குணம் ரொம்பவே மாறியிருந்தது. ரசிகர்கள் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை, வார இறுதி நாட்களின் எபிசோடுகளில் நடப்பதை பார்த்து ஓர் அளவுக்கு இவர்கள் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. இதுதான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

பச்சை மிளகாய் போல் காரசாரமாக சுற்றிக் கொண்டிருந்த அமுல் பேபி விஷ்ணு திடீரென காதல் டிராக்கை ஆரம்பித்து இருக்கிறார். பிரதீப்பின் மீது நெகட்டிவ் விமர்சனத்தை முதலில் கக்கிய மாயா திடீரென பிரதீப்பிடம் வழிந்து பேசினதையும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருந்தார்கள். அதே நேரத்தில் விசித்ரா மற்றும் ரவீனாவுக்கு வெளியே ரசிகர்களின் ஆதரவு இன்னும் கொஞ்சம் கூடிவிட்டது.

மேலும் போன வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த மாயாவை இந்த வாரம் வீட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என பார்வையாளர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். இன்று பிக் பாசின் முதல் ப்ரோமோவுக்கு மாயா தான் கண்டென்ட் கொடுத்திருக்கிறார். ராசிபலன் சொல்லுகிறேன் என்ற பெயரில் கூல் சுரேஷ் மாயாவை வெறுப்பேற்ற, மாயா கதறி அழுவது போல் அந்த ப்ரோமோ இருக்கிறது.

மாயா மீது சிம்பதி வருவதற்காக திடீரென இப்படி ப்ரோமோ வெளியிடுவதாக நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று தொடங்கிய ஓட்டிங்கில் மூன்று பேர் முன்னிலையில் இருப்பது இன்னும் பயங்கர வைரல் ஆகி வருகிறது. எப்போதும் போல பிரதீப் தான் ஓட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். இது பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கவினுக்கு கிடைக்கும் ஓட்டுகளை தான் ஞாபகப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் நிக்சன் இருக்கிறார். இது எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் பிரதீப்பிற்கும், நிக்சனுக்கும் ஒரு சில ஓட்டுகள் தான் வித்தியாசங்கள் இருக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடத்தில், பிக் பாஸ் வீட்டின் ஏஞ்சல் என சொல்லப்படும் ஐஷு இருக்கிறார்.

- Advertisement -

Trending News