வளரும் நேரத்தில் விளம்பரங்களில் நடித்த 3 பிரபலங்கள்.. அஜித்தையே மசிய வைத்த கார்ப்பரேட்

3 celebrities who acted in advertisement: இன்னைக்கு பெரிய நடிகர் நடிகைகளாக இருக்கக்கூடிய பிரபலங்கள் முன்பொரு காலத்தில் விளம்பரங்களில் நடித்தவர்கள் தான். அப்படி வளரும் நேரத்தில் விளம்பரங்களில் நடித்து உச்சம் பெற்று இப்போது அட்வர்டைஸ்மென்ட்டில் நடிக்க மறுக்கும் மூன்று பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ரஜினி: 73 வயதிலும் செம எனர்ஜிடிக்காக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கப் போகிறார்.

இப்படி தொடர்ந்து இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, ஆரம்ப காலத்தில் கூல்டிரிங்ஸ் விளம்பரங்களில் நடித்து அதன் பின் இப்போது உச்ச நட்சத்திரமாக மாறிய பின் அட்வர்டைஸ்மென்ட்டில் நடிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமல் போனது.

சினிமாவில் வளரும் சமயத்தில் விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள்

சாய் பல்லவி: மலையாளத்திலும் தமிழிலும் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் ஆக இளசுகளை கொள்ளை அடித்த சாய் பல்லவி, இப்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு டான்சராக தனது திரை பயணத்தை துவங்கிய போது, ஹெல்த் ட்ரிங்க் விளம்பரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

அஜித்குமார்: தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்தி இருக்கும் அஜித் குமார், இப்போது துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நுழைந்தபோது ஏகப்பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் சந்தித்தவர். அந்த சமயத்தில் காபி பொடி விளம்பரம் மற்றும் செருப்பு விளம்பரங்களிலும் நடித்து கார்ப்பரேட் நிறுவனத்தை தூக்கி விட பார்த்தவர். அதன் பின் சினிமாவில் வளர்ந்ததும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு துணை போகக்கூடாது என்று, இப்போது அட்வர்டைஸ்மென்ட் நடிக்க கூடாது என உறுதியுடன் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்