பலே திட்டத்துடன் நுழைந்திருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. விவரம் தெரியாமல் இன்னும் மிச்சர் தின்னும் அந்த 3 பேர்

Bigg Boss Season 7: விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஆறு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. முதல் வாரமே எலிமினேஷன், சின்ன பிக் பாஸ் வீடு, ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காமல் பவா செல்லதுரை வெளியேறியது என இந்த சீசன் பரபரப்பு குறையாமல் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் முதல் சீசனை பொருத்தவரைக்கும் இந்த விளையாட்டு பற்றியும், வெளியில் மக்களிடம் போட்டியாளர்களின் கேரக்டர் எப்படி சென்றடையும் என்பதை பற்றியும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் உள்ளே நுழைந்தவர்கள் எல்லோருமே கொஞ்சம் தெளிவான ஆட்களாகவே நுழைந்தார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இவர்களுக்கு சறுக்கிவிடும்.

மற்ற சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் உள்ளே நுழைந்த போட்டியாளர்கள் எல்லோருமே பயங்கர திட்டத்துடன் இருக்கிறார்கள். கண்டன்ட் கொடுத்தால்தான் உள்ளே இருக்க முடியும் என்பது இவர்களுக்கு தெளிவாக புரிந்திருக்கிறது. அதிலும் பிரதீப் எது போன்ற திட்டத்துடன் விளையாடுகிறார் என்று யாராலுமே கணிக்க முடியவில்லை. இவருக்கு வெளியில் ரசிகர்களும் அதிகமாகி விட்டார்கள்.

மற்றவர்களைப் பற்றி புற பேசி சண்டைய இழுத்து விட்டாலே உள்ளே இருந்து விடலாம் என மாயா மற்றும் பூர்ணிமா திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜோவிகா மற்றும் விசித்ரா மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசி வம்பு வந்தாலும் பரவாயில்லை என ஒவ்வொரு எபிசோடுக்கும் டிரெண்டாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ஜோவிகா பிரதீப்புடன் போட்ட சண்டை அனல் பறக்கும் விதமாக இருந்தது.

நடன கலைஞர் ஐஷு மற்றும் ரவீனா இப்போது க்யூட் லிஸ்டில் சேர்ந்து விட்டார்கள். அமுல் பேபி விஷ்ணு இப்படிப்பட்டவரா என யோசிக்கும் அளவுக்கு அடுத்தடுத்து கண்டன்ட்டை வாரி கொடுக்கிறார். கூல் சுரேஷ் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. பாடகர் நிக்சன் மற்றும் விஜய் வர்மா பிரதீப் ஆண்டனியுடன் மோதியே வைரல் ஆகிவிட்டார்கள்.

இதில் விளையாட்டு புரியாமல் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் மிச்சர் தின்று கொண்டு இருப்பது யுகேந்திரன், மணி மற்றும் வினுஷா தான். வீட்டிற்குள் வந்தவர்கள் எல்லோருமே பயங்கரமான திட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் இன்னும் ஆடியன்ஸாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கன்டென்ட் கொடுத்தால்தான் உள்ளே இருக்க முடியும் என்ற சூட்சமம் இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்