குழந்தை பெற்றதால் வாய்ப்பை இழந்த 3 நடிகைகள்.. கமலே வேண்டாம் என விரட்டி விட்ட நடிகை

சினிமாவில் ஹீரோயின்கள் திருமண வயதை கடந்தும் சிங்கிளாகவே இருப்பதற்கு காரணம் உள்ளது. அதாவது நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு ஹீரோயின் கேரக்டர் கொடுக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இப்படி இருக்கையில் குழந்தை பெற்றால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.

இதனால் தான் த்ரிஷா, அனுஷ்கா போன்ற நடிகைகள் தற்போது வரை திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் குழந்தை பெற்ற நடிகைகள் ஹீரோயின் வாய்ப்பை இழந்து இப்போது வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

Also Read : சத்தம் இல்லாமல் வெளிநாட்டுக்கு பறக்கும் கமல்.. சமாளிக்க முடியாமல் அதிரடியாக எடுத்த முடிவு

எமி ஜாக்சன் : மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் விஜய்க்கு ஜோடியாக தெறி படத்தில் நடித்திருந்தார். இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது. ஆனால் இப்போது எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தவுடன் வாய்ப்பு சினிமாவில் கிடைக்காமல் தவிர்த்து வருகிறார்.

சாயிஷா : தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாயிஷா. இவர் கடைக்குட்டி சிங்கம், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சாயிஷா நடிகர் ஆர்யாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இப்போது ஆயிஷாவை படங்களில் காண முடியவில்லை.

Also Read : ஆர்யா பிறந்த நாளுக்கு சாயிஷா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

காஜல் அகர்வால் : விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தது. மேலும் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தமானார்.

சில காரணங்களினால் இந்த படம் பாதியிலேயே தடைபட்டது. இப்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததால் மீண்டும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வாலை புக் செய்ய படக்குழு மறுத்து விட்டது.

Also Read : படத்தில் தான் மார்க்கெட் இல்லை, நாங்க அதுல சம்பாதிப்போம்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் காஜல், த்ரிஷா

- Advertisement -