தனுஷுக்கு ஜோடியாகும் 27 வயது பருவ மொட்டு நடிகை.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் செல்வராகவன் படம்

தனுஷ் தற்சமயம் கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் என்ற படத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் எழுதி இயக்கும் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

முன்னதாக செல்வராகவன் சாணிக் காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடிகராக களமிறங்கியுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை. இப்போது நானே வருவேன் படத்திற்கான வேலைகளில் முழுமையாக இறங்கியுள்ளார் செல்வராகவன்.

மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக இந்துஜா நடிக்க உள்ளார். இவர் விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

ஆனால் செல்வராகவன் ஓரளவு அறியப்படும் நடிகையை தனுஷுக்கு ஜோடியாக்கியுள்ளதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நானே வருவேன் படத்தின் தலைப்பை ராயன் என செல்வராகவன் மாற்றி விட்டதாக ஒரு தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக நானே வருவேன் தலைப்பை மாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார் செல்வராகவன்.

indhuja-cinemapettai
indhuja-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்