1986ஆம் ஆண்டு ரஜினிக்கு மகனாக நடித்துள்ள ரித்திக் ரோஷன்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அப்படி ரஜினி நடித்த படத்தில் அவருக்கு மகனாக ரித்திக் ரோஷன் நடித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

1980 முதல் 90 வரை ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த காலகட்டம் அது. அப்போது ரஜினிக்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.

ரஜினிகாந்த் ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் இன்று ஹிந்தி சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் ரஜினிகாந்துடன் நடித்துள்ளனர். அந்தவகையில் 1986 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஹிந்தியில் உருவான திரைப்படம் பகவான் தாதா.

ரஜினிகாந்த் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மகனாக இன்று ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் ரித்திக் ரோஷன் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

rajini-hrithikroshan-cinemapettai
rajini-hrithikroshan-cinemapettai

கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பகவான் தாதா படத்தில் நடித்தபோது ரஜினி தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை ரஜினி கமல் என பலரும் நடித்திருந்தாலும் இன்று வரை அங்கு நடக்கும் சில சதியால் பல தமிழ் நடிகர்கள் அங்கு சாதிக்க முடியாமல் போனது மறக்கக் கூடாத ஒன்று.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்