லியோ படத்தில் இணைந்த 24 பான் இந்தியா ஸ்டார்ஸ்.. லிஸ்ட்ட பாத்துட்டு எதை விட எதை வைக்க, விழி பிதுங்கும் பிரபலம்

Leo Movie Actor List: விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணிகள் ரெடியாகிக் கொண்டிருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை முடித்துவிட்டு வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்வதால் ப்ரோமோஷன் பணிகளையும் துவங்கப் போகின்றனர்.

ஆனால் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக்குவதால் தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தியில் இருக்கும் டாப் நடிகர்களையும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் களம் இறக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஒட்டு மொத்தமாக 24 முன்னணி இந்திய பிரபலங்கள் இணைந்து இருக்கின்றனர்.

Also Read: விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

இவர்கள் அனைவரையும் வைத்து லோகேஷ் படப்பிடிப்பை எடுத்து முடித்து விட்டார். ஆனால் எடிட்டிங்கில் இவர்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், யாரை வைத்திருப்பது, யாரை வெட்டி எறிவது என்ற பெரிய குழப்பத்தில், படத்தின் எடிட்டர் இருக்கிறார்.

விக்ரம் படத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் இந்த படத்தில் எவர்கிரீன் ஜோடியான விஜய், திரிஷாவை நீண்ட வருடத்திற்கு பின் மறுபடியும் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இவர்களுடன் சமீபத்தில் மறைந்த மனோபாலா, கைதி படத்தில் கலக்கிய ஜார்ஜ் மரியன், மேத்யூ தாமஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சஞ்சய் தத், மலையாள டாப் நடிகர் நிவின் பாலி, கமலஹாசன், மன்சூர் அலிகான், மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி நடித்துள்ளனர்.

Also Read: பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு.. லியோவுக்கு பதிலடி கொடுத்த முத்துவேல் பாண்டியன்

இவர்கள் மட்டுமல்ல நடிகை அபிராமி வெங்கடாசலம், தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனான சூர்யா, கைதி படத்தில் அன்பு கேரக்டரில் மிரட்டிவிட்ட அர்ஜுன் தாஸ், பகத் பாசிலும் இணைந்து நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித், நடிகரும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் ஹரிஷ் உத்தமன், நடிகை பிரியா ஆனந்த், இயக்குனரும் நடிகருமான மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜுன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் சத்யராஜ், நடிகர் கதிர் உள்ளிட்ட 24 பான் இந்தியா ஸ்டார்ஸ் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர்.

இப்படி ஒட்டு மொத்த திரை பட்டாளமே இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். இதனால் உலகிலேயே மிகக் கடினமான வேலை, இந்த படத்தை எடிட்டிங் செய்யக்கூடிய எடிட்டர் பிலோமின் ராஜுக்குதான். இதை எப்படி செய்வது என அவரும் விழி பிதுங்கி நிற்கிறார்.

Also Read: எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்