234 தொகுதியில் சாப்பாடு போட்டு ஓட்டு கேட்கும் விஜய்.. தலைவர் கிட்ட இன்னும் நிறைய கத்துக்கணும்

Actor Vijay: விஜய் தற்போது சினிமாவில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்து வசூல் மன்னன் என்ற இடத்தை பிடித்து விட்டார். இதனை அடுத்து கமிட்டாய் இருக்கும் படங்களில் இவருடைய சம்பளமாய் 200 கோடி வரை நிர்ணயித்திருக்கிறார். இதோடு மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நுணுக்கமான சில விஷயங்களில் இறங்கி உள்ளார்.

அதற்காக முன் ஏற்பாடாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தொகுதி வாரியாக 234 தொகுதிகளிலும் சென்று நேரடியாக அவர்களை பார்த்து அன்பளிப்பு மற்றும் நன்கொடையாக வழங்க இருக்கிறார். அதுவும் இவருடைய பிறந்தநாள் தினத்தை ஒட்டி இந்த விஷயங்களை செய்ய இருக்கிறார்.

Also read: ஏ ஆர் முருகதாஸ் பெருமை பட்ட சம்பவம்.. விஜய் பட வெற்றிக்கு ட்ரீட் கொடுத்த எஸ் ஜே சூர்யா

மேலும் அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன் இன்னும் நிறைய விஷயங்களை செய்து மக்கள் மனதில் நிரந்தரமான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பசி இல்லா உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். இதை குறித்து பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது விஜய் செய்யும் இந்த அனைத்துமே அவருடைய அரசியல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக மறைமுகமாக ஓட்டு கேட்கும் விதமாக சாப்பாடு போடுகிறார். ஏன் இதற்கு முன்னர் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் எத்தனையோ பேருக்கு தினமும் சாப்பாடு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த அளவுக்கு பப்ளிசிட்டி பண்ணது கிடையாது.

Also read: இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை.. விஜய்க்கும் சித்தார்த்துக்கும் இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பா

எதற்காக விஜய் மட்டும் இந்த அளவிற்கு இறங்கி சாப்பாடு கொடுத்து ஓட்டை பிச்சையாக கேட்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். அத்துடன் எப்படி பொது வாழ்க்கையில் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று என் தலைவரைப் பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

எத்தனையோ பேர் பசி இல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு கொடுக்காத சாப்பாடு எதற்காக 234 தொகுதியை டார்கெட் செய்து அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். அத்துடன் அதில் எங்கு பார்த்தாலும் இவருடைய போட்டோவை வைத்து இவர்தான் உங்களுக்கு உணவு வழங்குகிறார். அதனால் இவருக்கு உங்களுடைய ஓட்டு போட்டு விடுங்கள் என்று மறைமுகமாக பிச்சை கேட்பது எந்த விதத்திலும் சரியில்லை என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

Also read: கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்