2024 இல் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 6 படங்கள்.. இந்தியன் 2வுக்கு டப் கொடுக்க வரும் கல்கி

2024 high budget upcoming films: இந்த ஆண்டு முன்னணி ஹீரோவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்ததோடு வசூலிலும் பல மடங்கு லாபத்தை ஈட்டியது இதன் தொடர்ச்சியாக பிரமாண்ட பட்ஜெட் பிளஸ் முன்னணி ஹீரோக்கள், லாபமோ 1000 கோடி என டார்கெட்டுடன் 2024 பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் படங்களின் வரிசை இதோ

காந்தாரா 2: 16 கோடி செலவில் உருவான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா வசூலில் 400 கோடி பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் காந்தாரா 2, காந்தாராவின் முன் கதையே மையமாக வைத்து 500 கோடி பொருட்செலவில் பான் இந்தியா மூவியாக உருவாகி வருகிறது. காந்தாரா 2 வில் ரிஷப் ஷெட்டி உக்கிரமான மலைவாழ் தெய்வமாக ஆக்ரோஷமாக களம் இறங்குகிறார்.

தங்கலான்: “விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்” என ஊரை காப்பாற்ற வருகிறார் இந்த தங்கலான். பழங்குடி மக்களின் வலியை ரத்த கரையோடு விவரிக்கும் தங்கலானின் நடிப்பு போதவில்லை ஆதலால் பா ரஞ்சித் அவர்கள் திருப்தி ஏற்படும் வரை திரும்பத் திரும்ப எடுத்து ரிலீஸை தள்ளிக் கொண்டு போகிறார்.

Also read: 2024-ல் 1000 கோடி உறுதியா அடிக்க காத்திருக்கும் 5 படங்கள்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் ரெண்டு ஹீரோஸ்

இந்தியன் 2:”அநியாயம் பழகிருச்சுசே! எதுவும் இங்க மாறலையே” என்று திரும்பி வரும் இந்தியன் 2  டிஜிட்டல் உலகில் வாங்கப்படும் லஞ்சத்தை எப்படி ஒழிக்க போகிறார் என்பதை சஸ்பென்ஸ் உடன் விவரிக்கிறார் இயக்குனர் சங்கர். எல்லாமே பிரம்மாண்டம் என்பதால் இதற்கான கிராபிக்ஸ் பணிகள் அதிக பொருட்செலவுடன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

கங்குவா: சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவாவின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.  பொங்கல் அன்று படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடப் போவதாக தகவல். இந்திய சினிமாவிலேயே தரமாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு சண்டை காட்சிகளுடன் பிரம்மாண்டமாக ரெடியாகி வருகிறது கங்குவா.

கல்கி 2898 AD: நாக அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், ராணா போன்ற பெரும் புள்ளிகள் நடிக்கும் கல்கி, 500 கோடிக்கும் அதிகமான செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. உலக நாயகன் கமல் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் கல்கியை மே மாதம் வெளியிடப் போவதாக பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இரண்டு பாகமாக உருவாகும் கல்கியில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்காக கமல் மொத்தமாக 150 கோடி வாங்கி உள்ளாராம்.

விடா முயற்சி: முயற்சிகள் ஒருபோதும் தோல்வி அடையாது என்று கூற வரும் அஜித்தின் விடாமுயற்சி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் பொருட்டு விறுவிறுவென தயாராகி வருகிறது.  தற்போது அஜர்பைஜானில் ஏற்பட்டுள்ள புழுதி புயலால் சற்று தாமதமாகும் விடாமுயற்சி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also read: 2023 ல் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க செய்த 6 இயக்குனர்கள்.. சித்தா மூலம் சிந்திக்க வைத்த இயக்குனர்

- Advertisement -spot_img

Trending News