விக்ரமின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த போகும் 2023.. அடுத்தடுத்த ரிலீஸ் ஆகப்போகும் 4 படங்கள் 

சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எல்லாமே இவருக்கு பெயிலியர் ஆக அமைவதால் விக்ரம் துவண்டு போய் இருக்கிறார். ஏனென்றால்  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, மகான் , கடாரம் கொண்டான்  என அடுத்தடுத்து பல பெயிலியரை சந்தித்தார் சியான் விக்ரம்.

இந்த படங்களால் விக்ரமுக்கு பிசினஸ் கொஞ்சம் டல் அடித்தது. ஆனால் 2023 ஆம் வருடமான இந்த வருடம் அவருக்கு  கோல்டன் இயர் ஆக அமையப்போகிறது. 2023 இல் மட்டும் அடுத்தடுத்து வரிசையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 4 படங்களை வெளியிடுகிறார் சியான் விக்ரம்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இதில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து மிரட்டி இருப்பார். இதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில்  விக்ரமுக்கு முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் நிறைய காட்சிகள் இருக்கும் என்றும் சொல்லப்படுவதால், பொன்னியின் செல்வன் 2 அவருடைய இந்த வருட ஹிட் படங்கள் லிஸ்டில் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also Read: 5 வருடங்களாக கடன்காரர்களின் பிடியில் இருந்த ரொமான்டிக் இயக்குனர்.. கடைசியில் விக்ரமுக்கு வச்ச செக்

துருவ நட்சத்திரம்: விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்,  ரித்து வர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் சூட்டிங் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக  ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது படக்குழு  வருகிற மே மாதம் 19 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் கோடை கால விடுமுறை நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Also Read: அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தங்கலான் பட நடிகை.. ரசிச்சு ருசிச்சு போட்டோ எடுத்தது நம்ம சியானா!

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்திற்குள்  நிறைவடையும் என தகவல் வெளியானது. ஆகையால் இந்த படமும் இந்த வருடத்திற்குள்ளே ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளனர். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படத்தில்  விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இதில் விக்ரம் ஆதிவாசி போல் ரொம்பவே வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  அதிகமாகவே உள்ளதால், நிச்சயம் படம் சூப்பர் ஹிட் ஆக வாய்ப்புள்ளது. 

இதுபோக சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களான ஏஎல் விஜய் மற்றும் லிங்குசாமியிடம் கதைகள் கேட்டு வருகிறார். இவர்களது கூட்டணியிலும் வெற்றி படங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால்  இந்த வருடம் விக்ரம்  நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த 4 படங்கள்தான் அவருடைய மார்க்கெட்டை மறுபடியும் தூக்கி நிறுத்தப் போகிறது.

Also Read: படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்