2022 அரையாண்டை ஆட்டிப் படைத்த தென்னிந்திய படங்கள்.. பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்த பாலிவுட்

2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் தென்னிந்திய படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலைக் குவித்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு பாலிவுட் படங்கள், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களின் வசூல் சுமார் 2300 கோடியை தாண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அதைப் பெற முடியவில்லை.

இருப்பினும் கொரோனா பாதிப்பு இந்த ஆண்டின் துவக்கத்திலும் இருந்த போதுகூட வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட் படங்களை காட்டிலும் அதிக வசூலைக் குவித்திருக்கிறது. இதில் குறிப்பாக கேஜிஎப் 2,  ஆர்ஆர்ஆர், விக்ரம் போன்ற படங்களின் கலெக்சன் மட்டும் 1,500 கோடியை எட்டி இருக்கிறது.

அதிலும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட கேஜிஎப் 2 படம் இந்த ஆண்டின் பாதியில் சுமார் 434.70 கோடி வசூலை வாரி குவித்து இருக்கிறது. அதேபோன்று விக்ரம் வெளியான ஒரே மாதத்தில் உலக அளவில் 120 கோடிக்கு மேல் வசூல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறும் 252.90 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.

இதேபோன்று ஆலியா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படம் மொத்தமாக வெறும் 129.10 கோடியை வசூலித்து இருக்கிறது.இப்படி பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்த கொண்டிருப்பதால் தயாரிப்பாளர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மேலும் ரன்வீர் சிங், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான இந்த வருட படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்ட வில்லை. ஆனால் தென்னிந்திய மொழி படங்களை நம்பி விநியோகித்த தயாரிப்பாளர்கள் அதிக லாபத்தை ஈட்டி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். பாலிவுட் படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு ரசிகர்களின் ரசனையால் ஏற்பட்டிருக்கிறது.

இதை எப்படி சரி செய்வது என பாலிவுட் பிரபலங்களும், தயாரிப்பாளர்களும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் குழம்பித் தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து பாலிவுட் பிரபலங்களின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்த அரை ஆண்டு பாலிவுட் ஹீரோக்களுக்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றனர். மேலும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக ஆலியா பட் நடிப்பில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை வைத்து சர்வதேச அளவில் வசூலை தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்