2021-ல் வெளியான தமிழ் ஆல்பம் பாடல்கள்.. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரே பாடல் இதான்

2021 ஆம் ஆண்டு பல தமிழ் ஆல்பம் பாடல்கள் வெளியானது. இந்தப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்ற ஆண்டு அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் உருவான ஆல்பம் பாடல்களைப் பார்க்கலாம்.

என்ஜாய் என்ஜாமி: என்ஜாய் என்ஜாமி பாடல் வரிகளை எழுதி அறிவு, பாடகி தீ உடன் இணைந்து பாடி உள்ளார். இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இப்பாடல் இருந்தது. இந்த பாடல் வைரலாகி வணிகரீதியான வெற்றியையும், பரவலான பாராட்டையும் பெற்றது.

குட்டி பட்டாஸ்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் நடிப்பில் உருவான பாடல் குட்டி பட்டாஸ். சந்தோஷ் தயாநிதி இசையில் உருவான இந்த பாடலுக்கு ஏ பா ராஜா பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃப் செய்திருந்தார். ரசிகர்கள் குட்டி பட்டாஸ் பாடலை கொண்டாடினார்கள்.

அஸ்கு மாறோ: அஸ்கு மாறோ பாடலில் கார்த்திக் பாடல் வரி எழுதி தருண் குமார் இசையமைத்திருந்தார். தருண் குமார் மற்றும் சிவங்கி இருவரும் இந்த பாடலை பாடியிருந்தார்கள். கவின், தேஜு அஸ்வினி இருவரும் அஸ்கு மாறோ பாடலில் நடனம் ஆடி இருந்தார்கள்.

கிரிமினல் கிரஷ்: கிரிமினல் கிரஷ் பாடல் காட்சன் ருடால்ப் இசை அமைத்திருந்தார். எம் ஜி எம் பாடல் வரிகள் எழுத அனிருத் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடி இருந்தார்கள். இப்பாடலில் அருண்குமார் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருந்தார்கள். கிரிமினல் கிரஷ் பாடல் வெளியாகி வைரலானது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்