2021ல் திரையரங்கில் 50 நாட்களுக்கு மேல் தாறுமாறாக ஓடிய இரண்டே படம்.. மாஸ் காட்டிய மாஸ்டர்!

கடந்த 2021 ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக திரையரங்குகள் முடக்கப்பட்டாலும், அதன் பிறகு ஒருசில கட்டுப்பாடுடன் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை திரையரங்கிற்கு படையெடுக்க செய்ததுடன் 300 கோடி வசூலையும் குவித்து தாறுமாறான வெற்றியை பெற்றுத்தந்தது.

.அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம், 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தளபதி விஜயுடன் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான காம்போவை காட்டியது படத்திற்கு கூடுதல் சிறப்பாக கருதப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்புவின் மாநாடு திரைப்படமும் வசூல் ரீதியாக 100 கோடியை பெற்று தந்தாலும், 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் மாஸ்டர் திரைப் படத்திற்கு போட்டியாக ஓடியது. அத்துடன் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் 100 கோடி வசூல் குவித்தாலும்.

அதே சமயத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தால் 50 நாட்களுக்கு குறைவாகவே திரையரங்கில் ஓடியது. ஆகையால் வெறும் 30 நாட்கள் மட்டுமே திரையரங்கில் டாக்டர் திரைப்படம் திரையிடப்பட்டது.

சூப்பர் ஸ்டார்ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் குடும்ப கதைக்களத்தில் உருவாக்கி, சுமார் 240 கோடி வசூலைக் குவித்து திரையரங்கில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இவ்வாறு கடந்த இ2021 ஆண்டு திரையரங்கிற்கு ரசிகர்களே போகலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தை அறவே போக்கிய மாஸ்டர் திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடக் கூடிய படமாக இருந்துகொண்டிருக்கிறது.

அத்துடன் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மாஸ் காட்டியது அவருடைய கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் மாஸ்டர் மற்றும் மாநாடு ஆகிய இரண்டு மட்டுமே கடந்தாண்டு திரையரங்கில் 50 நாட்களுக்கும் மேலாக திரையிடப்பட்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்