2021ஆம் ஆண்டில் 8 இளம் நடிகைகளை களம் இறக்கிய தமிழ் சினிமா.. யாருக்கு அதிஷ்டம் இருக்குன்னு பார்க்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகைகளை தற்போது பார்க்கலாம்.

ரஷிதா விஜயன் – மலையாள நடிகையான ரஷிதா விஜயன் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமானார். முதல் படமே தனுஷ் என்ற டாப் நடிகரின் படம். அதுமட்டுமல்லாமல் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திலும் நடித்திருந்தார். இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிருணாளினி ரவி – டிக் டாக் என்ற செயலி மூலம் ரசிகர்கள் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி. அதில் கிடைத்த புகழ் காரணமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ஏற்கனவே தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தாலும் ஹீரோயினாக அறிமுகமானது கடந்த ஆண்டு தான். கடந்த ஆண்டில் மட்டும் இவருக்கு ஒரே சமயத்தில் எனிமி மற்றம் ஜாங்கோ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

நிதி அகர்வால் – ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதுமுகம் தான் நடிகை நிதி அகர்வால். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு கம்பேக் கொடுத்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் இரண்டே படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் தற்போது நடிகர் சிம்புவுடன் காதல் கிசு கிசுவில் நிதி அகர்வால் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துஷாரா விஜயன் – இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை துஷாரா விஜயன். இதில் ஆர்யாவின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக தோன்றி ஒரே படம் மூலம் ரசிகர்களை வசீகரம் செய்தவர்.

லிஜோமோல் ஜோஸ் – சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் இருளர் இன பெண்ணாக அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த மலையாள நடிகை தான் லிஜோமோல் ஜோஸ். இவர் ஏற்கனவே சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் நடித்திருந்தாலும் ஜெய்பீம் படம் தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா: தெலுங்கில் ஹிட் அடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடித்துள்ளார்.

பிரியங்கா அருள்மோகன்: டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் தற்போது இளைஞர்களின் கனவுநாயகியாக உள்ளார்.

மாளவிகா மோகன்: மாளவிகா மோகன் பெரும்பாலும் மலையாள படங்களிலே நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு அறிமுகமான அனைத்து நடிகைகளின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் தான். எனவே இவர்கள் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர். இதுல யாரு தாக்கு பிடிப்பார் யாருக்கு அதிஷ்டம் அதிகமாக இருக்கு என்பதை கருத்தில் கொண்டு உங்கள் பேவரிட்  நடிகையை கமெண்டில் பதிவுசெய்யவும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்