வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

20,000 ஊழியர்கள் பணியாற்றும் சாம்சங் தொழிற்சாலை இடம் மாற்றம்? ஊழியர்களின் போராட்டம் ஏன்? ஓர் அலசல்

சாம்சங் தொழிலாளர்கள் 8 அம்ச கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன. இதுகுறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்கவார்சத்திரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் தொழிற்சாலை. இந்த ஆலை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற தொழிற்சாலையில் ஏசி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், ஒரு நாளில் மட்டும் சுமார் 10, ஆயிரம் பிரிட்ஜ்கள் தயாரிக்கப் படுவதாகவும், 6 ஆயிரம் வாஷிங் மெஷின்கள் தயாரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கிருந்து 7 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. குறிப்பாக, வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சாம்சங் தொழிற்சாலையில் இருந்து அதிகபட்சமாக உற்பத்தியாகும் தயாரிப்புகள் இங்கிருந்துதான் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஊழியர்கள் போராட்டம் எதனால்?

தொழிலாளர்கள் நிறையப் பேர் இங்குப் பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் பணியினால் உண்டாகும் தயாரிப்புகளில் இருந்து மட்டும் பல கோடி வருவாய் கிடைப்பதாகவும், ஆனால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உழைப்புச் சுரண்டல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் பணியாளர்கள் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து அங்கீகரிக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்து போராடி வருகின்றனர். இந்த தொழிற்சங்கத்தின் மூலன் தங்கள் பணிச்சுரண்டலிலிருந்து விடுபட்டு, தேவைகள், உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை நேரம் குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இருக்கும் 11 மணி நேர வேலை நேரத்தை குறைக்க வேண்டும், கேண்டீனில் உணவின் வகைகளை அதிகரிப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கால்வரையற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத்தான் தொழிற்சங்கத்தை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இத்ற்கு நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைதுள்ளது.

சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இதுவரை, சிவி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மு.அன்பரசன் ஆகிய 3 அமைச்சர்கள் 7 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நிறுவனத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் ஊழியர்கள் அமைத்திருந்த பந்தலை அகற்றி 30 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை நேற்றிரவு போலீஸார் கைது செய்ததாக கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் கார்ப்பரேட்டிற்கு ஆதரவாக அரசு செயல்படுவது தவறு என்று விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், ’’அரசு இப்படி அக்கிரமாக நடந்துகொள்அது ஆட்சிக்கு நல்லதல்ல’’ என்று சிஐடியூ தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

20,000 ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலை இடமாற்றம்?

இந்த நிலையில், பணியாற்றும் ஊழியர்களுக்கு லீவு கிடையாது, குறைந்த சம்பளம் மட்டுமே அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்த நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தை காஞ்சிபுரம் சுங்குவார்சக்கரத்தில் இருந்து நொய்டாவிற்கு இடமாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தொழிற்சங விவகாரம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக சம்சங் தெரிவித்துள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி இன்று சிஐடியு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாலாஜி மற்றும் அருள் அமர்வின் போது முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

- Advertisement -

Trending News