2 படத்துகுமே வரும் ஆப்பு.. வெடிக்க ஆரம்பித்தது தீபாவளி வேட்டு

தீபாவளி என்றாலே பட்டாடை, இனிப்பு ஆகியவற்றைத் தாண்டி அன்று வெளியாகும் பெரிய நடிகர்களின் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அன்று பல படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன், சத்யராஜ் கூட்டணியில் மீண்டும் உருவாகி உள்ள பிரின்ஸ் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சர்தார் படத்தில் கார்த்தி பல கெட்டப்பில் அசத்தியுள்ளார். இதனால் இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

Also Read :பொன்னியின் செல்வனால் எகிறிய மவுசு.. கலக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயிக்கப்போவது யாரு?

ஆனால் இந்த படங்கள் வெளியாவதில் பல சிக்கல்கள் உள்ளது. அதாவது சர்தார் மற்றும் பிரன்ஸ் படம் வெளியாவதில் நிறைய பிரச்சனைகள் தற்போது ஏற்பட்டுள்ளதாம். ஏனென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் முந்தைய படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்ற போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அதாவது சிவகார்த்திகேயனின் சீமராஜா போன்ற பல படங்கள் நடுவில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.

Also Read :சீமராஜா தோல்விக்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்

மேலும் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த படமும் நஷ்டத்தை சந்தித்ததால் கடனில் அவதிப்பட்டு வந்தார். அதேபோல் கார்த்தியின் தேவ் படமும் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம்.

சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உறுதியாக உள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகை அன்று படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் பிரின்ஸ் மற்றும் சர்தார் படக்குழு யோசித்து வருகின்றனர்.

Also Read :களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

- Advertisement -