தனுசையே பல் பிடித்து பார்த்த 2 தயாரிப்பு நிறுவனங்கள்.. நானே ராஜா நானே மந்திரி இறங்கி அடித்த அசுரன்

2 production company that underestimated Dhanush’s talent: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான தனுஷ் நடிகராக, அறிமுகமாகி பாடல் ஆசிரியர், பாடகர், இயக்குனர் என தனது தரத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட, தனுஷின் வளர்ச்சி அசுர வேகத்தில் உண்டானது. படத்திற்கு படம்  வித்தியாசம் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் “3” திரைப்படத்தின் போது கொலவெறி பாடலை பாட சொல்லி, சிம்புவிடம் கேட்க, சிம்புவோ! அதை நிராகரித்து மாபெரும் தவறு செய்தார்.

அதே பாடலை தனுஷ் அவரது சொந்த குரலில் பாடி ஏகபோக வரவேற்பை பெற்று புகழின் உச்சம் சென்றார்.

அதே போன்றதொரு தரமான சம்பவம்  தற்போது நடக்க உள்ளது. இளன் இயக்கத்தில்  ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்திருந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை யுவன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது இளன், டாடா புகழ்  கவின் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஸ்டார் என்ற  திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பிற்கிடையே விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த ஸ்டார்.

இயக்குனர் இளனுடன் ஜோடி சேரும் தனுஷ்

இதற்கு அடுத்தபடியாக இளம் இயக்குனர் இளன், மதுரையை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் ஸ்டோரியை தனுஷிடம் கூற மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம் தனுஷ்.

பின்பு இந்த கதையை தயாரிக்க சத்திய ஜோதி பிலிம்சை அணுகியது இந்தக் கூட்டணி. இந்த கதைக்கு இவ்வளவு பட்ஜெட்டா என்று, கதை திருப்தியாக இல்லை என்று  நிராகரித்தது சத்யஜோதி பிலிம்ஸ்.

மீண்டும் இந்த கதையின் மீதான ஆர்வம் குறையாமல் போகவே மதுரையில் இருக்கும் பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளரான மதுரை அன்பு விடம் இக்கதையை கொண்டு சென்றுள்ளனர்.

அவருக்கும் கதையை கேட்டு பிடிக்காமல் போகவே, கதையின் மீதுள்ள நம்பிக்கையால்   இளநின் இந்த ஸ்டோரியை. தானே தயாரிக்கப் போவதாக அதிரடி முடிவெடுத்துள்ளார் இந்த அசுரன். 

எந்த இடத்தில் நிராகரிக்கப்படுகிறாரோ அதே இடத்தில் துளிர்த்து  எழுவது என்பது தனுஷிற்கு பழகிய ஒன்றுதான். கண்டிப்பாக தனுஷின் சாதனையில்  இத்திரைப்படம் ஒரு  மைல்கல்லாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை

இளன் இயக்கியுள்ள கவினின் ஸ்டார் படத்தின் ரிலீஸ்க்கு பின் இந்த கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. யாரை நம்பி நான் பொறந்தேன்! போங்கடா போங்க! என்று 150 கோடி வரை பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் தயாரிப்புக்கு தயாராகி உள்ளார் தனுஷ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்