ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

இந்த தீபாவளியை துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் சிங்கிளோடு கொண்டாடலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதில் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுக்கும் வகையில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற அறிவிப்பை பட குழு போஸ்டருடன் வெளியிட்டு இருந்தது.

ஆனால் துணிவு திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அதனால் அவர்கள் கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இப்போது வெளியாகாது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also read : வாரிசு சூட்டிங்கில் நடக்கும் அநியாயம்.. 250 கோடிகளில் லாபம் பெற்றும் நடக்கும் மோசமான சம்பவம்

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் பல மாதங்களாக சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தைப் பற்றிய எந்த விதமான அப்டேட்டும் தெரியாமல் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறாக வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை பட குழு அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பட ரிலீஸ் நாளையும் அறிவித்த நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்களுக்கான வேலைகள் படுஜோராக நடந்து வருகிறது.

Also read : துணிவுக்கு தண்ணி காட்டும் வாரிசு விஜய்.. கூட்டி கழிச்சு தயாரிப்பாளர் போட்ட 1000 கோடி கணக்கு

அதை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று படக்குழு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறதாம். அந்த வகையில் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும், அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவும் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குனர் வினோத் இன்னும் படப்பிடிப்பை முடிக்காமல் இழுத்தடித்து வருவது அஜித் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பது அந்த கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

Also read : விஜய்யை பார்த்து மிரண்ட வாரிசு படக்குழு.. தளபதி எச்சரித்ததன் காரணம் இதுதான்

- Advertisement -