தனிக்காட்டு ராணியாக வாய்ப்புகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆப்படிக்க வந்த 2 ஹீரோயின்கள்

Aishwarya Rajesh: நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகள் எல்லாம் கோடி கணக்கில் பட்ஜெட் இருக்கும் படங்களை தான் தேடி நடித்து வருகிறார்கள். லோ பட்ஜெட் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ஷ்ட நாயகி ஆக இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல நடிப்பு திறமையோடு சேர்ந்து, மக்களிடையே வரவேற்பும் இவருக்கு இருப்பதால் இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரை நிறைய படங்களில் புக் செய்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கென கிடைக்கும் தனிப்பட்ட கேட்டகிரி படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீரா காதல் போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, வெள்ளி திரையில் தனக்கான சிம்மாசனத்தை பெற்றிருந்தார்.

Also Read:மணிகண்டன் உடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை.. ரகசியமாய் நடந்த நிச்சயதார்த்தம்

டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் இருக்கும் நிலையில், அடுத்த கட்ட லெவலில் இருக்கும் படங்கள் என்றாலே அது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் கிடைக்கும். வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் மற்றும் தனி கதாநாயகியாக நடிக்கும் படங்கள் என புகுந்து விளையாடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவுக்கு ஆப்படிக்கும் வகையில் இரண்டு ஹீரோயின்கள் வந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷை ஆட்டம் காண வைக்கும் இரண்டு நாயகிகள்

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த கட்டா குஸ்தி படம் இவரை வேற லெவலுக்கு கொண்டு சேர்த்து விட்டது. அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வெளியாக ஐஸ்வர்யா லட்சுமிக்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவை அசைத்துப் பார்த்திருக்கிறார் நடிகை அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகள் என்பதை தாண்டி, விருமன் மற்றும் மாவீரன் படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போதைக்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ் ஆக அதிதி இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குறிப்பிட்ட படங்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இருந்த எண்ணத்தை மொத்தமாய் மாற்றி விட்டார்கள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அதிதி சங்கர். சோலோவாக பட வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இவர்கள் இருவரும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

Also Read:ஐயர் ஆத்து மாமிக்கு வந்த விபரீத ஆசை.. நயன்தாராவின் அன்னபூரணி கதை இதுதான்