ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரஜினியால் வளர முடியாமல் போன 2 ஹீரோக்கள்.. 400 படங்களுக்கு மேல் நடித்தும் பிரயோஜனமில்ல

அந்த காலத்தில் சினிமாவை ஆட்டி படைத்தார் ரஜினி. அவரை ஹீரோவாக வைத்து நிறைய படங்கள் எடுத்தனர். அந்தப் படங்கள் அனைத்திற்கும் தாறுமாறான வசூலை குவித்ததால், ரஜினியின் மார்க்கெட் எங்கேயோ சென்றது. அப்பொழுது அவரது படங்களில் நடிகர் விஜயகுமார் வில்லனாகவும், கௌரவ தோற்றமாகவும், நண்பனாகவும் நடித்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

மேலும் விஜயகுமார் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அதன் பின்னர் அவருக்கு கௌரவ சிறப்பு கதாபாத்திரங்களே வந்தது. இவர் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இருப்பினும் இவரால் ரஜினி போல் வளர முடியவில்லை.

Also Read: ரஜினி, கமலுக்கு அடையாளமாய் இருக்கும் படம்.. பாதியிலேயே கைவிடப்பட இருந்த காரணம்

ஆனாலும் அவருடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் மற்றொரு நடிகர் ஜெய்சங்கர். இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் டாப் நடிகர்களாக இருந்த அதே காலகட்டத்தில் நடித்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

மேலும் 100 படங்களுக்கு மேல் நடித்த ஜெய்சங்கர் அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டு காளை படத்தில் வில்லனாக புதிய பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றார். அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கினார்.

Also Read: ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

அது மட்டுமல்ல இவருடைய படங்களில் பெரும்பாலும் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும். மேலும் பல படங்களில் துப்பறிவாளன், போலீஸ் போன்ற கெட்டப்பில் மிரட்டியதால் ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என்று ரசிகர்கள் இவரை அழைத்தனர். பல படங்களில் குறைந்த இடைவெளியில் தொடர்ந்து நடித்ததால் இவருடைய படங்கள் வாரத்திற்கு ஒன்றாவது திரைக்கு வந்து விடும்.

அதனால் ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ எனவும் அழைக்கப்பட்டார். இவ்வளவு பெருமைகளுக்குரிய ஜெய்சங்கர் திறமை இருந்தும் ரஜினி போல் வளர முடியவில்லை. மேலும் விஜயகுமார் போலவே இவரும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து தன்னுடைய கேரியரை தொலைத்தார்.

Also Read: 2-ம் பாகத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார்.. படத்தைப் பார்த்து பிரமித்துப்போன ரஜினி

- Advertisement -

Trending News