கௌதம் மேனன் கேரியரில் விழுந்த 2 பெரிய அடிகள்.. அவர் பெயரை தட்டிட்டு போன தனுஷ் பெஸ்டி

Gautham Menon: இயக்குனராக பல வித்தியாசமான கதைகளை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த கௌதம் மேனன் தற்போது நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவிற்கு புது பயணத்தில் முயற்சி செய்கிறார். அதேபோல் இவர் எடுத்த படங்களில் காதல் மற்றும் ரொமாண்டிக் படங்கள் மட்டுமே அதிகளவில் மக்களிடம் ரீச் ஆகி வெற்றி பெற்று இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதனாலையே ஒரு ஸ்டைலிஷ் இயக்குனராக, நடிகர்கள் மற்றும் தயாரிப்பார்கள் கண்ணுக்கு தென்பட்டார். ஆனால் தற்போது இவருடைய நிலைமை எப்படி இருக்கிறது என்றால், முன்னணி ஹீரோக்கள் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதற்கு காரணம் தனக்குத்தானே சூனியம் வைக்கும் விதமாக சமீபத்தில் இவர் எடுத்த படங்கள் எதுவுமே மார்க்கெட்டில் விலை போகவில்லை.

அதாவது இவர் இயக்கத்தில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் ஜோஸ்வா இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி ஆகி இவர் மீது இருந்த நம்பிக்கை மொத்தமும் காலியாகிவிட்டது என்று சொல்லலாம். இன்னொரு பக்கம் விக்ரமை வைத்து பல வருடங்களாக எடுத்து வரும் துருவ நட்சத்திரம் படமும் வெளிவர முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Also read: கௌதம் மேனன் நினைச்சாலும் திரும்பி எடுக்க முடியாத 5 படங்கள்.. அப்பாஸ் கேட்டும் மறுத்த ஸ்டைலிஷ் இயக்குனர்

அதனால் இவர் பக்கம் யாரும் தலை வைத்து கூட படுக்க தயாராக இல்லை. இப்படி இவரின் நிலைமை கொஞ்சம் சரிந்ததால் இவருடைய பெயரை இன்னொரு இயக்குனர் தட்டி தூக்கி விட்டார். அவர் தனுஷின் மிகப்பெரிய பெஸ்டி என்று கூட சொல்லலாம். ஏனென்றால் தனுஷை வைத்து எடுத்தால் அவருக்கு விருது கிடைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுடைய காம்பினேஷன் படு தூக்கலாக இருக்கும்.

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் வெற்றி மாறன் தான். தற்போது கௌதம் மேனன் எடுத்த பெயரை ஈசியாக தட்டி தூக்கி விட்டார். பொல்லாதவன் படத்தில் ஆரம்பித்த இயக்குனர் பயணம், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற வித்தியாசமான படங்களை எடுத்து மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை இயக்குனர் என்ற ஒரு விதையை பதித்து விட்டார்.

மக்களுக்கு மட்டும் இல்ல முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார். தற்போது இவருடைய இயக்கத்தில் எப்படியாவது ஒரு படத்தை பண்ணி விட வேண்டும் என்று பல ஹீரோக்கள் தவமிருந்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் சசிகுமார், சூரி நடிப்பில் கருடன் படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

Also read: Joshua Imai Pol Kaakha Movie Review- 4 வருட தடைகளைத் தாண்டி ஜெயித்தாரா கௌதம் மேனன்.? ஜோஷ்வா இமை போல் காக்க முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்