அசால்டாக விஜய் சேதுபதி இடத்தை பிடித்த 2 நடிகர்கள்.. கையில் இருக்கும் அரை டஜன் படங்கள்

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது அங்கு கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறாராம். பொதுவாக விஜய் சேதுபதி வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 இருந்து 12 படங்களாவது நடித்த முடித்து விடுவார்.

மாதத்திற்கு ஒரு படம் அவருடைய படங்கள் வெளியாவதை காட்டிலும் வாரத்திற்கு ஒரு படம் விஜய் சேதுபதியின் படங்களாகவே வந்து கொண்டிருந்தது. அதுவும் ஒவ்வொரு படத்திலும் அவரது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மேலும் தொடர்ந்து ரசிகர்கள் ஒரே மூஞ்சை பார்ப்பதால் விஜய் சேதுபதி மீது அதிருப்தியும் ஏற்பட்டது.

Also Read : பிளாப் இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. கடைசி படமே ஓடல, இதுல 4வது வேரையா?

ஆகையால் இப்போது விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு உள்ளார். மேலும் பாலிவுட்டில் அவர் நடித்த படங்கள் தற்போது வரை வெளியாகாமல் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அதுமட்டும்இன்றி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ரொம்ப வருஷமாக விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில் அசால்டாக விஜய் சேதுபதியின் இடத்தை இரண்டு ஹீரோக்கள் பிடித்து விட்டார்கள். இப்போது அவர்களது கைவசம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் தான் இப்போது போட்டி போட்டுக்கொண்டு அதிக படத்தில் நடித்து வருகிறார்கள்.

Also Read : 8 வருஷத்தில் விஜய் சேதுபதியே பிரமித்து போன விஷயம்.. மனுஷன் திறந்த புத்தகமா இருக்காரு!

அந்த வகையில் எஸ் ஜே சூர்யா கைவசம் உயர்ந்த மனிதன், பொம்மி, ஜிகர்தண்டா 2, மார்க் ஆண்டனி என பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு வர உள்ளது. அதேபோல் லாரன்ஸ் ருத்ரா, சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆகையால் இவர்கள் இருவருமே தற்போது படு பிஸியாக உள்ளனர்.

மேலும் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சேர்ந்து கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மிக விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Also Read : கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்