கமலால் தக் லைஃப்பிலிருந்து விலகிய 2 நடிகர்கள்.. ஓவரா முட்டுக் கொடுக்கும் மணிரத்தினம்

2 Actors Who Quit Kamalal Thug Life: “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்” என்பது போல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய கையோடு அரசியலிலும் நுழைந்து வாகை சூட பாடுபடும் உலக நாயகனால் சினிமாவில் கலைஞர்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் அளப்பரிய சாதனைகளை புரிந்து  வளரும் கலைஞர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் உலகநாயகன் கமலஹாசன்  கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பின் மணிரத்தினத்துடன் தக் லைப்பில் ஒன்றிணைந்து உள்ளார்.

உலக நாயகனுடன் திரிஷா, துல்கர் சல்மான்,கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி கலைஞர்களும் இணைந்து மல்டி ஸ்டார் மூவியாக உருவாக இருந்தது தக் லைஃப்.

தக் லைஃப் போஸ்டர் வந்த மாத்திரத்திலேயே, கமல் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் ஏதோ தரமான சம்பவம் காத்திருக்கு என்பது போல ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.

படப்பிடிப்பு துவங்கியாகிவிட்டது என பலவித அப்டேட்டுகள் வந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை ஒட்டி அனைத்தும் சட்டென நிறுத்தி வைக்கப்பட்டது.

அனல் பறக்க வந்த பாராளுமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக எந்த வேட்பாளரை நிறுத்துவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி போடுவது என அரசியலில் பிசியாகி போனார் இந்த கலைமகன்.

தக் லைஃபில் இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் நடிக்கும் காட்சிகளை வைத்துவிட்டு, மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்க சொன்னாராம் கமல்.

தக் லைஃபில் நடக்கும் ஆள் மாறாட்டம்

தக் லைஃபில் நடக்கும் சூழ்ச்சி என்னவென்றால் கமல் கதாபாத்திரமான ரங்கராய சக்திவேல் நாயக்கனுக்கு மட்டும் அதிக வெயிட்டேஜ் கொடுத்து மற்ற முன்னணி நடிகர்களை டீலில் விட்டு விடுகிறாராம் மணிரத்தினம்.

யாருக்கும் அவர்களது கதாபாத்திரம் பற்றிய முழுமையான விளக்கமும் கொடுக்கப்படாமல் கால்ஷீட் பற்றி, எந்த ஒரு அறிவிப்பும் தராமல் அதிக காலமாக வெயிட்டிங்கில் வைக்கப்படுவதாக குறைபட்டு வருகின்றனர் நடிகர்கள்.

இதை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் பல்வேறு சூழ்நிலை காரணங்களை  கூறி நைசாக  விலகி கொண்டார் துல்கர் சல்மான்.

பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பளித்த நன்றிகடனுக்காக ஒட்டிக்கொண்ட ஜெயம் ரவியும்,

காலதாமதத்தால் தனது சகோதரர் மோகன் ராஜாவின் தனி ஒருவன் 2 படம் தள்ளிப் போவதாக கூறி, கழண்டு கொண்டார்.

திரிஷாவும் கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் நிலையில்,  பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுக்க வைத்த மணிரத்தினத்திடம் எதுவும் வாய் பேச முடியாமல் அமைதி காத்து வருகிறாராம்.

இவ்வளவு குழப்படிகளுக்கும் காரணமான உலகநாயகனோ  இது எதையும் கண்டு கொள்ளாது தன் கட்சியை முன்னேற்றி தானும் முன்னேற அயராது பாடுபட்டு வருகிறார்.

இப்போது துல்கர் சல்மான் கேரக்டருக்கு சிம்பு நடிக்க உள்ளார், ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய்யின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்