முதல் மோஷன் போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் எது தெரியுமா? அட! 100 கோடி படமாச்சே

தமிழ் சினிமாவில் படத்தை விளம்பரப்படுத்த பட தயாரிப்பாளர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். முன்னாடி எல்லாம் படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால் படம் வெளியான பிறகு படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றவர்களிடம் படத்தை பற்றி பெருமையாக பேசினால் மட்டுமே படத்தை விளம்பரப்படுத்த முடியும். ஆனால் தற்போதெல்லாம் அப்படி கிடையாது படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு முயற்சிகளை படக்குழு செய்து வருகிறது. முதலில் படத்தின் ப்ரோமோ பின்பு படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் படத்தைப் பற்றிய எண்ணத்தை உருவாக்குவார்கள். அடுத்து ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டுவார்கள்.

கடைசியாக படத்தை பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசி படத்தை புரமோஷன் செய்வார்கள். சமீபத்தில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்த ஒருசில நபர்களை வைத்து கூட படத்தை புரமோஷன் செய்தனர். ஆனால் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மோஷன் போஸ்டரை வெளியிட்டது கத்தி படத்தின் மூலம் தான். அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்தாலும் யாரும் மோஷன் போஸ்டரை பயன்படுத்தி புரமோஷன் செய்யவில்லை.

ஆனால் கத்தி படத்தில் நியூஸ் பேப்பர் வருவது போல் காட்டி பின்பு தளபதி விஜய் வருவார். பேக்ரவுண்டில் கத்தி மியூசிக்போட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பிரபலமடைந்து.
அதன்பிறகுதான் பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மோஷன் போஸ்டரை பயன்படுத்தி அவர்களது படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு முழுக்க முழுக்க காரணம் கத்தி படம் தான் என்பது பலருக்கும் தெரியாது.

தற்போது வரை பல நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமாக படத்தை புரமோஷன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்