
கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு குஷியான தனுஷ் அடுத்ததாக ஹாலிவுட்டில் த கிரே மேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாம்.
ஆனால் தற்போது இந்தியாவில் கொரானா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் கொஞ்ச நாட்கள் அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வு எடுக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம். அதனைத் தொடர்ந்து விரைவில் ரஜினியும் அமெரிக்கா செல்லவுள்ளார்.
இது ஒருபுறமிருக்க தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் உருவாக உள்ளன. விடுமுறையில் இருக்கும் தனுஷ் திரும்பி வந்ததும் முதல் முதலில் கார்த்திக் நரேன் இயக்கும் D43 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதனை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் தனுஷ். இந்த படம் முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற உப்பென்னா படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவருக்கு வயது 17தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள் தப்பி தவறி கூட தனுஷுடன் பார்ட்டிக்கு சென்று விடாதீர்கள் என எச்சரித்துள்ளார்களாம். தனுஷுடன் பார்ட்டிக்கு சென்ற நடிகைகளின் கதி என்ன ஆனது என்பது சினிமாவுக்கே தெரிந்த வரலாறு.
