
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது ஜகமே தந்திரம் திரைப்படம்.
அதனை தொடர்ந்து தற்போது த கிரே மேன், அற்றங்கிரே, முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவனுடன் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதற்கிடையில் தனுஷுக்கு ஏற்கனவே மாரி மற்றும் மாரி-2 போன்ற படங்களை கொடுத்த பாலாஜி மோகன் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஐபோனில் ஒரு படம் உருவாக உள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இருந்தாலும் படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உப்பெண்ணா படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இவருக்கு வெறும் 17 வயதுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பெண்ணா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் கீர்த்தி ஷெட்டி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முன்னணி நடிகையாக வலம் வர முடிவு செய்துள்ளாராம்.
