17 லட்சம் வாடிக்கையாளர்களை தூக்கிய நிறுவனம்.. அதிரடி காட்டும் வாட்ஸ்அப் செயலி

அன்றாட வாழ்வில் நம் கருத்துக்களை பகிர்வதில் பல சமூக வலைத்தளங்களை பக்கங்களை நாம் உபயோகிக்கிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கிறது வாட்ஸ்அப் செயலி. இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இந்த வாட்ஸ் அப் செயலி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 17 லட்சம் மக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தது. இதில் சமூக வலைத்தளங்களில் சில புதிய விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்திய விதி மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராயப்படுகிறது. அதாவது பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும் போது கண்காணிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கும் முடக்கப்படுகிறது.

அதன்படி 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 30 வரை விதிகளை மீறியதாக 17,59,000 பேரின் அக்கவுன்ட் வாட்ஸ் அப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 602 குற்றங்கள் பதிவாகியிருந்தது. இதில் 36 வாட்ஸ்அப் அக்கவுண்ட்கல் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேபோல் வாட்ஸ்அப் ஆக்கவுண்ட் நீக்கப்பட்டு இருந்தால் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்த அக்கவுண்ட் ரீஸ்டோர் செய்யப்பட்டிருந்தால் இதை ஆக்சன் என வாட்ஸ்அப் குறிப்பிடுகிறது. வாட்ஸ்அப்பில் 357 அக்கவுண்ட்களை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவற்றில் 36 அக்கவுண்ட்கள் ஆக்சன் செய்யப்பட்டது.

இதற்காக வாட்ஸ்அப் செயலி குழு அமைத்து இதுபோன்ற விதிமீறல்கள் செயல்படுவோரின் கணக்குகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் போது வாட்ஸ்அப் செயலி மேம்படும் என இந்நிறுவனம் கூறியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்