136 கோடி கொடுத்த தைரியம்.. அடுத்த வேட்டைக்கு ரெடியான பிரேமலு, முதல் ஆளாக துண்டு போட்ட உதயநிதி

Premalu: இந்த வருடம் மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது. அதில் பிரேமலு இளைஞர்களை கவர்ந்த படமாக இருக்கிறது.

premalu
premalu

கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜூ நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் 136 கோடி வசூலை தட்டி தூக்கியது. இத்தனைக்கும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 3 கோடி தான்.

ஆனாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு என இப்படம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இதையெல்லாம் பார்த்த பட குழு தற்போது அடுத்த வேட்டைக்கு தயாராகி விட்டனர்.

உருவாகிறது பிரேமலு 2

அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே பாவனா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பகத் பாசில் அண்ட் பிரண்ட்ஸ் மற்றும் வொர்க்கிங் கிளாஸ் ஹீரோ நிறுவனங்கள் தயாரிக்கிறது.

மேலும் இதன் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஏற்கனவே முதல் பாகத்தையும் இவர்கள்தான் வெளியிட்டனர்.

அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்த நிலையில் தற்போது முதல் ஆளாக இந்த நிறுவனம் துண்டு போட்டுவிட்டது. இதில் பகத் பாசில் உதயநிதியின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்