அந்த விஜய் படத்தில் நடிக்கும்போது எனக்கு 13 வயசு தான்.. ஆனா பார்த்தா அப்படி தெரியலையேமா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு அப்போது 13 வயதுதான் ஆகியிருந்தது என்பதை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் கடந்த 10 வருடங்களில் விஜய்யின் பல வியாபாரங்கள் உச்சத்தை தொட்டுள்ளார். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் உள்ள நடிகர் என்றால் அது விஜய்தான் என பலரும் கூறி வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. இன்று கூட விஜய்யின் தளபதி 65 படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

விஜய்யுடன் பலரும் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் 2001 ஆம் ஆண்டு இந்த வாய்ப்பை எளிதாக பெற்றவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீ. விஜய் சித்திக் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ்.

இந்த படத்தில் விஜய்யை காதலிக்கும் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் அபிநயஸ்ரீ. அந்த படத்தில் நடிக்கும்போது அபிநயஸ்ரீக்கு வெறும் 13 வயது தான் ஆகியதாம். ஆனால் படத்தில் பார்க்கும்போது 20 வயது மதிக்கத்தக்க பெண்போல் இருந்தார்.

abinayashree-in-friends-movie
abinayashree-in-friends-movie

இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் அபிநயஸ்ரீ பகிர்ந்து கொண்டார். ஆரம்பித்தது விஜய் படமாக இருந்தாலும் அதன் பிறகு பெரிய அளவு கதாநாயகி வாய்ப்பு இல்லாமல் தன்னுடைய அம்மாவை போலவே சினிமாவில் அயிட்டம் பாடல்களுக்கு நடனம் ஆட தொடங்கினார் என்பதும் கூடுதல் தகவல்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -