உலகளவில் தாறுமாறான வசூலை பெற்ற 14 படங்கள்..  ஐந்து முறை பின்னி பெடலெடுத்த அஜித்

Tamil Movies: தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள்  உலகையே திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய தரமான படங்களை வரிசையாக தந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் அஜித் உடைய ஐந்து படங்கள் உலக அளவில் வசூலில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்டிருக்கிறது.

தளபதி விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக பார்க்கப்பட்ட அட்லி, பாலிவுட்டில் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார். இந்த படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 120 கோடி கலெக்ஷன் ஆனது. அதன் தொடர்ச்சியாக  ரிலீஸ் ஆன மூன்று நாள் முடிவில் 370 கோடியை  பாக்ஸ் ஆபிஸில்  கலெக்ஷன் செய்துள்ளது.

Also Read: எதையும் காதில் வாங்காமல் அட்லி ஆடும் ஆட்டம்.. சின்ன அண்ணன், பெரியண்ணன் ஆசிர்வாதத்தோடு அடிக்கும் மரண அடி

வெறும் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தற்போது  தமிழ் இயக்குனரான அட்லியின் கைவண்ணத்தால் பாலிவுட் மட்டுமல்ல உலக அளவில்  திரையரங்குகளில் வசூலில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த படமும் உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அதை போல் ஹரி இயக்கிய சூர்யா நடித்த சிங்கம் 2, தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் போன்ற படங்களும் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டிய தமிழ் படங்களாகும். மேலும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன்  படத்திற்கும் உலக அளவில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: தப்ப தெளிவா பண்ணிட்டு வாயாலேயே வடை சுடாதீங்க.! அட்லிக்கு பதிலடி கொடுத்த விடாமுயற்சி மகிழ் திருமேனி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் மிரட்டி விட்ட விக்ரம் படமும் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O, பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட சமீபத்தில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் போன்ற படங்களும் உலக அளவில் நல்ல வசூல் பெற்றது

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நெகட்டிவ் ஷாடில் நடித்த மங்காத்தா படம் தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் தாறுமாறான வசூலை பெற்றது. அது மட்டுமல்ல விஷ்ணுவரதன் இயக்கிய ஆரம்பம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால், சிவா இயக்கிய விசுவாசம், ஹெச் வினோத் இயக்கிய துணிவு போன்ற ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில்  நல்ல வசூலை பெற்றது.

Also Read: அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -