Connect with us
boomerang-movie

யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.

News | செய்திகள்

யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.

காமெடி வேடத்தில் மட்டும் நடித்து வந்த யோகி பாபு ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். இதனை அவர் ஓபனாக சொல்லமால், மெயின் ரோல் என்று பிரஸ் மீட்டுகளில் சமாளித்து வருகிறார். டி 16 , பீறிட்டு அறையில் முரட்டு குத்து படங்கள் வாயிலாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த யாஷிகா பிக் பாஸ் வேட்டூனில் நுழைந்தார். வந்த பின் மகத்துடன் ரொமான்டிக் படம், ‘ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது’ என இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

‘ஜாம்பி’

Zombie

யோகி பாபுவுடன் யாஷிகா நடிக்க கமிட் ஆகியுள்ள அடுத்த படம். திகில் கலந்த நகைச்சுவை படமான ‘மோ’ வை இயக்குனர் புவன் நல்லான். இவர் தன் அடுத்த படத்தையும் அதே ஹாரர் காமெடி ஜானரில் இயக்குகிறார்.

மேலும் இந்த படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், “லைப் ஆப் பை” புகழ் டி.எம்.கார்த்திக், அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா, உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

zombie

பிரேம்ஜி இசை. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு . இப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. மனோபாலா நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குநர் பொன்ராம் ‘க்ளாப் போர்டு’ அடித்து துவக்கி வைத்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top