India | இந்தியா
ஒரே ஆர்டரில் ரூ55000 பணத்தை இழந்த Zomato நிறுவனம்..
ஆன்லைனில் தவறு நடப்பது ஒன்றும் புதிதல்ல பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் கூட ஆர்டரில் முறைகேடுகள் நடந்துள்ளன. ( எடுத்துக்காட்டு செல்போனை ஆர்டர் செய்தால் வெறும் ஹெட் போன் மட்டும் எல்லாம் ரவந்துள்ளது. )
பூனே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார். அவர் ஆர்டர் செய்தது பன்னீர் பட்டர், ஆனால் Zomato நிறுவன ஊழியர் கொண்டுவந்தது பட்டர் சிக்கன். இதையடுத்து வழக்கறிஞரான அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பி வாங்கியுள்ளார்.
ஆனால் இருப்பினும் தவறாக உணவு அனுப்பிய நிறுவனத்தின் மீதும் Zomato நிறுவனத்தின் மீதும் வழக்கு ஒன்றை தொடர்ந்து அந்த வழக்கின் மூலம் அவருக்கு நீதிபதி 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை பாராட்டிய பலரும் எங்களுக்கும் இந்த மாதிரி ஆன்லைன் முறைகேடுகள் நடந்துள்ளது. நாங்கள் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக நேர்மையான தீர்ப்பு கிடைக்குமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
