fbpx
Connect with us

Cinemapettai

தமிழர்களை அடிமையாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! Zomato ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. வீடியோ..

Zomato

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழர்களை அடிமையாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! Zomato ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. வீடியோ..

ஐ.ஐ.டி மாணவர்களால் உருவாக்கப்பட்ட Zomato நிறுவனம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியை சார்ந்த Zomato ஊழியர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.

அதற்கு முக்கிய காரணமாக ஒரு டெலிவரிக்கு 40 ரூபாய் என்று இருந்த தொகையை தற்போது 30 ரூபாயாக குறைத்து விட்டனர். இதனால் தினம்தோறும் 200 முதல் 300 வரை ஊழியர்களின் உழைத்த காசை எடுப்பதாக கூறி உள்ளனர்.

இது அந்நிறுவனத்தை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இடங்களில் இருக்கும் மற்ற ஊழியர்கள் ஒன்று சேர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் வடமாநிலத்தவறுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கொடுக்கின்ற தொகைக்கு வேலை பார்ப்பதால் தங்களையும் அடிமையாக நினைத்து விட்டார்கள் என்று ஊழியர்கள் கதறும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாங்கள் அடிமை இல்லை என்றோம் தேவைப்பட்டால் ஒன்றுகூடி போராடுவோம் என்றும் அந்த ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு வேலையை தான் வட மாநிலத்தவர்கள் மிகுதியாக பணியமர்த்தப் படுவதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்களும் இதே வேலையை செய்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அழிந்து கொண்டே வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top