கோடிக்கணக்கில் செலவு செய்த சோமேட்டோ.. சர்ச்சையில் சிக்கிய வீடியோ! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஹிரித்திக் ரோஷன். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தூம், கிரீஷ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. ஹிந்தி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இவருக்கு பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

அதேபோல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கத்ரீனா கைப் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாவார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு இவர்கள் இருவருமே மீடியாவில் மிகப்பெரிய செலிபிரிட்டியாக உள்ள நிலையில், ஒரே ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்து வரும் பிரபல நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்த காரணத்தால் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைப் இருவரையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

கஸ்டமர்கள் தான் தங்களது முதல் ஹீரோ என்னும் கான்சப்ட்டை வைத்து சோமேட்டோ நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தான் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் தனித்தனியே நடித்துள்ளனர். இந்த விளம்பரம் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து தற்போது வரை மீம் கிரியேட்டர்ஸ்கள் இதை வச்சு செய்கின்றனர்.

அந்த விளம்பர படத்தில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் சமோசா ஆர்டர் செய்திருப்பார். அவரை பார்த்ததும் சோமேட்டோ பார்ட்னர் சந்தோஷமடைகிறார். உடனே இருங்க வரேன் செல்ஃபி எடுத்துக்கலாம் என ஹிரித்திக் கூற, காத்திருக்கும் அந்த டெலிவர் பார்ட்னருக்கு அடுத்த ஆர்டர் வந்துவிடுகிறது. ஹிரித்திக் ரோஷனுக்காக காத்திருக்க முடியாது நமக்கு நம்முடைய கஸ்டமர் தான் ஹீரோ என அவர் வருவதற்குள் கிளம்பி சென்று விடுகிறார்.

தற்போது இந்த விளம்பர படத்தைதான் அனைவரும் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள். இதனால் சோமேட்டோ நிறுவனம் செய்வதறியாமல் புலம்பி வருகிறதாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது இவ்வளவு கோடி கணக்கில் விளம்பரப்படுத்துவதற்காக ஊழியர்களுக்கு ஏதாவது செய்யலாமே என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம் எங்களுக்கு டெலிவரி ஊழியர்கள்தான் முக்கியம் என்பது போன்று அந்த விளம்பரத்தில் காட்டியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளனர். அதற்குப் பின் தான் கஸ்டமர் என்பது போன்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

zomato-twit
zomato-twit
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்