fbpx
Connect with us

Cinemapettai

ப்ளே – ஆப் போட்டிக்கு முன் தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த தோனி. வைரலாகுது செல்ல மகள் ஜிவாவின் மெசேஜ் சொல்லும் வீடியோ.

News | செய்திகள்

ப்ளே – ஆப் போட்டிக்கு முன் தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த தோனி. வைரலாகுது செல்ல மகள் ஜிவாவின் மெசேஜ் சொல்லும் வீடியோ.

ஜிவா – தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல மகள் ஜிவா. ஐபில் போட்டிகளில் கட்டாயம் சென்னையில் நடக்கும் போட்டிகளில் இவரும் மைதானத்தில் தான் இருப்பார். தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரவாரமாக கோசம் போடுவார் இந்த வாண்டு. அடிக்கடி இவரின் டான்ஸ், பாடல் பாடுவது, குறும்பு செய்வது போன்ற போட்டோ, விடியோக்க்கள் சமூகவலைத்தளங்களில் தோனி, அல்லது சாக்ஷி பதிவிடுவார்கள்.

நாடு முழுவதும் ஐந்தாவது கட்டமாக பல்வேறு தொகுதிகளில் மக்களவை தேர்தல் நேற்று நடந்தது. இந்நிலையில் பஞ்சாப் உடன் போட்டி முடிந்ததும், நாட்டின் குடிமகனாகவும் தன் கடமையை நிறைவேற்ற தோனி தனது சொந்த ஊர் சென்று வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தன் அம்மா – அப்பா போலவே அனைவரும்  தவறாமல் வோட் போடவேண்டும் என ஜிவா தோனி தெரிவித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபில் போன்ற ஸ்பீட் அதிகம் உள்ள தொடர், அதிலும் மும்பை போன்ற வலுவான டீமுடன் போட்டி, வெறும் இரண்டு நாள் இடைவெளி மட்டுமே இருந்தும்,  டீம் கேப்டன் இது போல செல்வதென்பது சென்னை சூப்பர் கிங்ஸில் மட்டுமே சாத்தியம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top