Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிஎஸ்கேவுக்கும், அப்பாவுக்கும் ஆதரவாக ஆரவாரம் செய்யும் ஜிவா தோனி
Published on
11 வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி கோலாகலமாக நடந்து வருகின்றனர். இரண்டு வருடம் கழித்து கம் பேக் கொடுத்த சென்னை அணி அசத்தி வருகின்றனர். முதியோர் கிரிக்கெட்டா என்று கலாய்த்தவர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்து, பிரஷர் அதிகரிக்க கடைசி ஓவர் வரை மேட்ச் பார்ப்பது இந்த சீசன் வாடிக்கையாகிவிட்டது.
முதல் சீசன் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி தான் தல. சென்னை அணியை பொறுத்தவரை பெரிய குடும்ப போலவே ஆகிவிட்டனர். ரெய்னா, ஜடேஜா, பிராவோ, விஜய் தற்பொழுது இணைந்துள்ள ராயுடு, ஹர்பஜன், வாட்சன், தாஹிர் என அனைவரும் துளியும் ஈகோ இன்றி இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹோட்டல் ரூமில் தோனியின் மகள் ‘ஜிவா’ சிஎஸ்கேவுக்கு ஆதரவாக கோஷம் போடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியுள்ளது.
