fbpx
Connect with us

லைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.

ZERO

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கும் படம் ஜீரோ . இந்த படம் முற்றிலும் மாறுபட்ட காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் செண்டிமெண்ட் கலந்த காதல் கதைகள் எடுப்பதில் வித்தகர். தனுஷின் ‘ரான்ஜஹானா’ அதாங்க ‘அம்பிகாபதி’, மாதவன் நடிப்பில் ‘தனு வெட்ஸ் மனு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.

sharukhan zero

sharukhan zero

ஷாருக் குள்ள மனிதன் ரோலில், செலிபிரிட்டியாக கத்ரினா கைஃப், ஊனமுற்ற வீல் சாரில் அனுஷ்கா ஷர்மா என வெளியானது போஸ்டர்ஸ். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான், மாதவன், ஜிம்மி ஷெர்கில், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஸ்மா கபூர், ஜுஹி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் டிசம்பர் 21 வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top