புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவி சீரியலை ஓட ஓட விரட்டிய ஜீ தமிழ்.. புதுக் கதையுடன் கிராமத்தில் மாஸ் எண்டரி கொடுத்த கார்த்திக்

Vijay Tv and Z Tamil Serial: விஜய் டிவி சீரியலை பொறுத்தவரை சன் டிவிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்து வரும் வகையில் விஜய் டிவி சீரியல்கள் அடிவாங்கிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல் உடன் போட்டி போடும் விதமாக விஜய் டிவி சீரியல் போராடி வருகிறது.

ஆனாலும் விஜய் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளும் வகையில் ஜீ தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விஜய் டிவியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் கடந்த பல மாதங்களுக்கு முன் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்றது. ஆனால் ரோகிணியின் தில்லாலங்கடி வேலை அதிகரித்துக் கொண்டே போனதால் தற்போது இந்த சீரியல் தோல்வி அடைந்து விட்டது.

இதனால் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் மாஸ் கட்டி வருகிறது. அந்த வகையில் கார்த்திகை தீபம் சீரியலில் முதல் அத்தியாயம் முடிந்து விட்டது. இரண்டாவது அத்தியாயமாக தீபாவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கும் விதமாக கார்த்திக் கிராமத்திற்குள் நுழைந்திருக்கிறார். அங்கே சாமுண்டீஸ்வரியின் கேரக்டரை மாற்றி மாமா உடன் சேர்த்து வைப்பதாக தாத்தாவுக்கு சபதம் போட்டிருக்கிறார்.

அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சாமுண்டீஸ்வரி மனதில் இடம் பிடிக்கும் விதமாக கார்த்திக் மாஸ் காட்டப் போகிறார். அதனாலேயே கிராமத்தின் மண்வாசனை உடன் ஜொலிக்கும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம்6.12 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக தனத்தின் வாழ்க்கையை கார்த்திக் இடம் இருந்து காப்பாற்றுவதற்கு போராடிய மாயாவிற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியதால் சந்தியா ராகம் சீரியல் 5.59 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதனை அடுத்து சண்முகத்தின் தங்கை இசக்கிக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்கும் விதமாக சண்முகம் ஆர்ப்பரித்து தங்கையை கவுரவப்படுத்திவிட்டார். அடுத்ததாக பரணிக்கும் சண்முகத்திற்கும் இடையில் ஒரு பந்தம் உருவாக்க வேண்டும் என்பதற்காக சண்முகத்தின் குடும்பம் முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் 5.29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக வீரா சீரியல் 5.16 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்து வரும் வாரங்களில் விஜய் டிவி சீரியலை ஓட ஓட விரட்டி இரண்டாவது இடத்தை ஜீ தமிழ் சீரியல்கள் பிடித்து விடும்.

- Advertisement -

Trending News