fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நான்கு சீரியலில் மாதம் முழுவதும் திருமணக்கோலம்.. ஒரே செலவில் கச்சிதமாக காய் நகர்த்தும் பிரபல டிவி

tv-serial-marriage-scene

Videos | வீடியோக்கள்

நான்கு சீரியலில் மாதம் முழுவதும் திருமணக்கோலம்.. ஒரே செலவில் கச்சிதமாக காய் நகர்த்தும் பிரபல டிவி

புதுமையும் வித்தியாசத்தையும் காட்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது மெகா கல்யாண வைபவம் என்ற பெயரில் புதிய ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியை கூட்டி வருவது அதில் இடம்பெறும் சீரியல்களே. அதிரடி திருப்பங்களுடன் உருவாகும் சீரியல்களுக்கு மக்களிடையே என்றும் மவுசு குறைவதில்லை. மக்களுடைய அந்த ஆர்வத்தை தக்க வைக்க பல சேனல்களும் பல வித்தியாசங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் தற்பொழுது கல்யாண வைபவம் என்ற எபிசோடை உருவாக்கியுள்ளனர். பல நாட்களாக ஜீ தமிழ் சீரியல்களில் ஹீரோ ஹீரோயின்களுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக நான்கு திருமணங்கள் இம்மாதம் முழுவதும்  மக்களுக்கு  காட்டப்பட இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை, நீதானே என் பொன்வசந்தம் போன்ற சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களின் ஜோடிகளான பொம்மி -சித்தார்த், வசுந்தரா- அர்ஜுன்,  சூர்யா-அணு ஆகியோருக்கு திருமண வைபவம் நடைபெற உள்ளது.

zee-tamil-serial

zee-tamil-serial

இதில் சற்றும் எதிர்பார்க்காத ஜோடியாக  புதுப்புது அர்த்தங்கள் தொடரின் லக்ஷ்மி- ஹரிஷ் இவர்களுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எபிசோடை ஜீ தமிழ் வாராவாரம் ஞாயிறு அன்று மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏற்கனவே சன் டிவி ஞாயிறு அன்று ஒவ்வொரு சீரியல்களின் ஸ்பெஷல் எபிசோடை  ஒளிபரப்பாகி வருகிறது அந்த வரிசையில் ஜீ தமிழும் தற்பொழுது இணைந்துள்ளது. இந்த கல்யாண வைபவத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top