புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளி கெத்தாக வரும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலிக்கும் 5 சீரியல்கள்

Zee Tamil Serial: சின்னத்திரை சீரியல் பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் சேனல், கலைஞர் சேனல் போன்ற பல சேனல்கள் போட்டி போட்டு வருகிறது. ஆனால் மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை தான். இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் உள்ள சீரியல் மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வந்தது.

ஆனால் தற்போது விஜய் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு கெத்தாக வந்து கொண்டிருக்கிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று ஜொலிக்கிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: கார்த்திக்கின் புதிய பரிமாணத்தை காட்டும் விதமாக கிராமத்துக் கதைகளுடன் இரண்டாவது அத்தியாயமாக இன்று முதல் தொடங்க இருக்கிறது. அந்த வகையில் பழைய விஷயங்களை நினைவுக்கு கொண்டு வரக்கூடாது என்பதற்காக பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு கார்த்திக் வாழ போகிறார். அதே கிராமத்தில் சாமுண்டீஸ்வரி, ஆண்கள் வர்க்கத்தையே வெறுக்கும் அளவிற்கு அவர்களை ஒதுக்கி வைக்கிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளப் போகிறார்கள். அந்த வகையில் புது அத்தியாயத்துடன் கார்த்திகை தீபம் சூடு பிடிக்கப் போகிறது.

சந்தியா ராகம்: தனத்தின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக மாயா எடுத்த அதிரடி முடிவு தான் கதிர், தனத்தின் கழுத்தில் தாலி கட்ட வைத்தது. ஆனால் இதற்கு காரணம் மாயா தான் என்று ரகுராம் குடும்பத்திற்கு தெரிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக மாயவை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனாலும் மாயா எது செஞ்சாலும் சரியாக தான் இருக்கும் என்பதால் மாயாவின் பெரியம்மா தனியாக கூப்பிட்டு நடந்த விஷயத்தை கேட்கிறார். அப்பொழுது மாயவும், கார்த்திக் பற்றி அனைத்து உண்மைகளையும் சொல்கிறார். இதற்குப் பிறகு மாயா மற்றும் கதிர் வாழ்க்கை என்னவாக இருக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அண்ணா: சௌந்தரபாண்டியன் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பதற்கு ஏற்ப சண்முகத்தின் தங்கை இசக்கியை அடக்கி ஆளும் வகையில் ஆணாதிக்கம் செய்து வருகிறார். இதனை தட்டிக் கேட்கும் விதமாக சண்முகம் பொங்கி எழுந்து இசக்கியை கௌரவப்படுத்தும் விதமாக உணர்ச்சி பூர்வமான சம்பவங்களுடன் களம் இறங்கி விட்டார்.

வீரா: எப்படியாவது சதிகளை செய்து மாறனிடமிருந்து வீராவை பிரித்து மாறனை பழிவாங்க வேண்டும் என்று கண்மணி சூழ்ச்சி செய்து வருகிறார். ஆனால் வீரா, கண்மணியின் பழிவாங்கும் எண்ணத்தை மாற்றி பொறுப்பான மருமகளாகவும், அன்பான மனைவியாகவும் மாத்தணும் என்று போராடி வருகிறார். ஆனால் இவர்களுக்கு இடையே மாறன் சிக்கித் தவிக்கிறார்.

நெஞ்சத்தை கிள்ளாதே: மது தம்பிக்காகவும், கௌதம் தங்கைக்காகவும் கல்யாணம் செய்திருந்தாலும் தற்போது இவர்களுடைய அன்பு அதிகரிக்கும் வகையில் மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தலை தீபாவளிக்கு போன இடத்தில் இவர்கள் இருவருக்கும் விரிசல் ஏற்படுத்தும் விதமாக மதுவின் பழைய காதல் விஷயங்களை கிளறி கௌதமின் நம்பிக்கையை இழக்க வைக்கும் விதமாக பல சாதிகள் நடக்க இருக்கிறது. என்னதான் இருந்தாலும் கௌதம் எந்த காரணத்திற்காகவும் மதுவை விட்டுக் கொடுக்க மாட்டார்.

- Advertisement -

Trending News