fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சன் டிவி சீரியலை காப்பியடிக்கும் ஜீ தமிழ்..இதுக்கு ஒரு எண்டே கிடையாதா

zee-tamil-sun-tv

Videos | வீடியோக்கள்

சன் டிவி சீரியலை காப்பியடிக்கும் ஜீ தமிழ்..இதுக்கு ஒரு எண்டே கிடையாதா

தமிழ் சீரியல் என்றாலே சன் டிவிதான் என்று சொல்லும் அளவிற்கு பல தரமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சித்தி, மெட்டி ஒலி போன்ற செயல்கள் இன்றும் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

சன் டிவி தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல சுவாரஸ்யங்களை கூட்டி மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது டி ஆர் பி யில் முன்னணியில் இருக்கும் சீரியல் கயல்.

தன் குடும்பத்திற்காக தன்னுடைய சந்தோஷங்களை விட்டுக்கொடுத்து அவர்களுக்காகவே வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த சீரியல். இதில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் யாரடி நீ மோகினி சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்த சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் நடிக்கிறார்.

இந்த சீரியல் தொடங்கி சில மாதங்களே ஆனாலும் டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்போது இந்த சீரியலை போன்ற ஒரு கதை களத்தை ஜீ தமிழ் தேர்ந்தெடுத்துள்ளது. ரஜினி என்னும் பெயரிடப்பட்ட இந்த சீரியல் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதில் திருமணம் என்னும் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஸ்ரேயா அஞ்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தன் உழைப்பினால் குடும்பத்தை தாங்கும் நாயகி, தன் தங்கைக்காக காதலை தியாகம் செய்கிறார். இந்த கதை கருவை கொண்ட ரஜினி சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

முன்னதாக ஜீ தமிழ், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலை பார்த்து அதே போன்று செம்பருத்தி என்ற சீரியலை எடுத்தது. இதனால் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்போது மீண்டும் சன் டிவியை காப்பி அடித்து உள்ளது. இந்த புதிய சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இதுவும் காப்பியா, உங்களுக்கு ஒரு எண்டே கிடையாதா என்று கலாய்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top